ETV Bharat / bharat

உங்கள் சானிடைசர் பாதுகாப்பானதா? - உலக சுகாதார அமைப்பு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சானிடைசர்களை பயன்படுத்துவது பல மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும் சானிடைசர்களை பயன்படுத்துவது ஆபத்தானாதா, குழந்தைகள் சானிட்டைசர்களை பயன்படுத்தலாமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

Sanitizer
Sanitizer
author img

By

Published : Jun 28, 2020, 5:20 PM IST

கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கைகளை தூய்மைப்படுத்த உதவும் சானிடைசர்கள் இப்போது அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சேர்ந்து விட்டன. ஆனால் இந்த சானிடைசர்களைத் தேர்வு செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம், மக்களின் பயத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட பல நிறுவனங்கள் பாதுகாப்பற்ற சானிடைசர்களை சந்தையில் உலவ விட்டுள்ளன.

சானிடைசர்களில் எத்தனால் பயன்படுத்த வேண்டும் என்று எஃப்டிஏ பரிந்துரைத்திருக்கும் நிலையில், பல உற்பத்தியாளர்கள் விலை குறைந்த மெத்தனாலை பயன்படுத்துகின்றனர். இந்த மெத்தனால் பல்வேறு ஆபத்தான நச்சுத்தன்மை கொண்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். சந்தையில் ஏராளமான போலி சானிடைசர்கள் உலவுவதைக் கண்டறிந்த தெலங்கானா மாநில நிர்வாகம், தற்போது கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சானிடைசர்களின் மாதிரிகளை சேகரித்து சோதனை செய்யுமாறு, மருந்து ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சரியான சானிடைசர்களை எப்படி தேர்வு செய்வது?

கெட்டியாக இல்லாமல் அதிக நீர்த்தன்மை கொண்ட சானிடைசர்கள் பயன்படுத்தலாம். கைகளில் தேய்த்த பின் 60 விநாடிகளுக்குள் முழுவதும் ஆவியாக வேண்டும். கெட்டியாகவும், ஒட்டும் தன்மையுடனும் இருக்கும் சானிடைசர்கள் தோலில் பாதிப்புகளை ஏற்படுத்தும். 60 சதவீத எத்தனாலுடன் ஆல்கஹால் கலந்த சானிடைசர்களை பயன்படுத்துமாறு வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். சானிடைசர்கள் பயன்படுத்திய பின் 20 முதல் 30 விநாடிகளுக்கு கைகளை நன்றாக தேய்க்க வேண்டும்.

எத்தானால் அல்லது மெத்தனால் எது ஆபத்தானது?

இரண்டு சொற்களும் ஒன்று போல இருந்தாலும், ஆபத்து ஒரே ஒரு எழுத்தில் மாறுபட்டுள்ளது. நோய்த் தொற்று அபாயத்தால் சானிடைசர்களின் விற்பனை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. சூப்பர் மார்க்கெட்களிலும், மருந்து கடைகளிலும் அடுக்கப்பட்டுள்ள, அழகான பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் வண்ண மயமான சானிடைசர்களைத் தான் நாம் வாங்குகிறோம்.

சானிடைசர்களைப் பயன்படுத்த வேண்டும் எனத் தெளிவுடன் இருக்கும் நாம், எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற தெளிவைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு சானிடைசரில் 60 சதவீத எத்தனால் (எத்தில் ஆல்கஹால்) அல்லது 70 சதவீத ஐசோப்ரொபனால் (ஐசோப்ரோபில் ஆல்கஹால்) இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும் என்று, நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (சிடிசி) பரிந்துரைக்கிறது. மேலும், மெத்தனால் (மெத்தில் ஆல்கஹால்) பயன்படுத்த வேண்டாம் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கிறது.

மெத்தில் ஆல்கஹால் ஆபத்தானதா?

நுகர்வோர் அனைவரும் மெத்தனால் கலந்த சானிடைசர்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று யுஎஸ்எஃப்டிஏ கேட்டுக்கொண்டுள்ளது. மெத்தில் ஆல்கஹால் தோலில் படும்போதும் தேய்க்கும் போதும் பாதிப்புகள் ஏற்படும். அதிக அளவில் பயன்படுத்தும் போது பெரிய ஆபத்துகள் ஏற்படும். மெத்தனாலின் நச்சுத் தன்மையால் குமட்டல், வாந்தி, தெளிவற்ற பார்வை மற்றும் வலிப்பு ஏற்படும். மெத்தனாலின் நச்சுத்தன்மை குழந்தைகளை அதிகளவு பாதிக்கும்.

ஆபத்து உள்ளதா?

அதிக அளவு சானிடைசர்கள் பயன்படுத்துவது ஆபத்தானது என்று சிடிசி எச்சரிக்கிறது. நுண்ணுயிர்களை அழிக்கும் ஆயுதமாக சானிடைசர்கள் இருந்தாலும், கை தோல் உரிதல், கொப்புளங்கள் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். பாக்டீரியா எதிர்ப்புப் பொருட்கள் கலந்துள்ள சானிடைசர்கள் தான் நுண்ணுயிர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

ஹைதராபாத்தில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் இணை இயக்குநர் டாக்டர்.நவீன்குமார் நமது ஈநாடு இதழிடம் இது குறித்து தெரிவிக்கையில், ”சானிடைசர்களுக்கான ஃபார்முலாவை உலக சுகாதார மையம் பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் நாம் மூன்று அல்லது நான்கு திறன் வாய்ந்த பொருட்களை மட்டும் தான் பயன்படுத்துகிறோம்.

எத்தனால் கலந்த சானிடைசர்கள் தான் அதிக பாதுகாப்பானதாகவும் சக்தி வாய்ந்தவையாகவும் உள்ளன. மெத்தனால் என்பது மலிவாகவும் அதிக அளவிலும் கிடைக்கிறது. சொல்லப் போனால் எத்தனாலில் இருந்து மெத்தனாலை வேறுபடுத்துவது கடினம். பல நிறுவனங்கள் மெத்தனால் கலந்த சானிடைசர்களை விற்பதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள தோல் மருத்துவர் டாக்டர்.புனிதா, கை கழுவுவதற்கு சோப் மற்றும் தண்ணீர் தான் சிறந்தது எனத் தெரிவித்துள்ளார். சானிடைசர்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், தூங்கச் செல்லும் முன் கைகளை ஈரப்படுத்துவது அவசியம். சானிடைசர்கள் தோலுக்குள் செல்லும்போது பாதிப்புகள் ஏற்படுத்தும் என்பதால் வண்ணமயமாக, வாசனையாக இருக்கும் சானிடைசர்களை, குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத வண்ணம் வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோவிட்-19 சிகிச்சைக்கு டெக்ஸாமெதாசோன் மருந்தை சேர்த்தது மத்திய சுகாதாரத் துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.