ஆப்கானிஸ்தான் வழியாக டெல்லிக்கு வரும் ஈரான் நாட்டில் உற்பத்தியாகும் ஆப்பிள், ஆசாத்பூர் மண்டியில் விற்கப்படுகின்றன. இந்த சட்டவிரோத இறக்குமதி, காஷ்மீர் ஆப்பிள்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும் என காஷ்மீர் பழ உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர் சங்கம் தெரிவிக்கின்றது. இந்த சட்டவிரோத இறக்குமதி தடை செய்திட வேண்டும் என டெல்லி முதலமைச்சருக்கு சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தினர் கூறுகையில், “ஈரானில் இருந்து ஆப்பிள்கள் அனுமதியின்றி ஆப்கானிஸ்தான் வழியாக நம் நாட்டிற்கு வருகின்றன. ஆசாத்பூரில் உள்ள நியூ சப்ஸி மண்டியில் அவை சட்டவிரோதமாக ஏலம் விடப்படுகின்றன. சட்டவிரோத இறக்குமதி, உள்நாட்டு பழ உற்பத்திகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிஎம்சி மண்டிஸில் ப்ராக்ஸி பழங்களை இறக்குமதி செய்வதும் விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். அதனை தடை செய்வது அவசியமாகும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சட்டவிரோத இறக்குமதியை தடை செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.