ETV Bharat / bharat

சர்வதேச ஹவாலா நெட்வொர்க்குடன் ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்கு தொடர்பு!

திருவனந்தபுரம் : தூதரக ராஜதந்திர பொருள்கள் மூலம் கேரளாவில் தங்கக் கடத்தலில் சர்வதேச ஹவாலா கும்பல் சம்பந்தப்பட்டிருப்பதாக சுங்க விசாரணைக் குழு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சர்வதேச ஹவாலா நெட்வொர்க்குடன் ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்கு தொடர்பு!
சர்வதேச ஹவாலா நெட்வொர்க்குடன் ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்கு தொடர்பு!
author img

By

Published : Aug 11, 2020, 9:45 PM IST

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி ராஜந்திர பொருள்கள் கொண்டுவரப்பட்ட பெட்டிகளிலிருந்து, ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து என்ஐஏ மற்றும் சுங்கத்துறை அலுவலர்கள் நடத்திய விசாரணையில், கேரள முதலமைச்சரின் முதன்மைச் செயலர் சிவசங்கர், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட சிலரை என்ஐஏ அலுவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முன்னதாக, ஜூலை 11ஆம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.

அவர்களின் காவல் முடிவடைந்ததையடுத்து, சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்ட சரீத், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகிய மூவரும் முன் பிணைக்கோரி கொச்சியில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்றது.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சுங்கத் துறையின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், "இந்த வழக்கை விசாரிக்கும் சுங்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்போடு தற்போது அமலாக்கத்துறையும் விசாரணையில் இணைந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் அமலாக்கப் பிரிவின் கீழ் அதன் அதிகாரத்திற்கு உட்பட்டு உள்ளது என்பதால் அந்த துறையினரும் விசாரணையில் இணைந்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு உயர் அலுவலர்கள் மற்றும் அதிகாரத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. கடத்தல் நடவடிக்கைகளுக்கான பணம் ஹவாலா கும்பல்கள், குற்றப்பின்னணியுடைய நெட்வொர்க்குகள் மூலம் வளைகுடா நாடுகளுக்கு வந்து சேர்ந்ததாக அறிய முடிகிறது. வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் பெற குற்றம் சாட்டப்பட்டவர்களை மேலும் விசாரிக்க வேண்டும்.

தவிர, வெளிநாட்டில் இன்னும் குற்றம் சாட்டப்பட்ட இருவரான பைசல் ஃபரீத் மற்றும் ராபின்ஸ் ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட உள்ளனர். இந்த வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்கள் அப்போதுதான் கிடைக்கும். எனவே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் பிணை மனுவையும் நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட சரித், ஸ்வப்னா சுரேஷ், மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரது பிணை மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.