ETV Bharat / bharat

சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம் - ஒரு பார்வை - Drug abuse in India

சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம் 26 ஜூன் ஆம் தேதிக் கொண்டாடப்படும் நிலையில் போதைப் பொருள் தொடர்பான ஒரு அலசல் பார்வை இதோ...

Drug
Drug
author img

By

Published : Jun 26, 2020, 2:30 PM IST

உலக அளவில் போதைப்பொருள் இல்லாத ஒரு சர்வதேச சமூகத்தின் இலக்கை அடைவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக போராடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.

சட்டவிரோத மருந்துகள் சமூகத்திற்கு ஏற்படுத்தும் முக்கிய பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் உலகளவில் கடைப்பிடிக்கப் படுகிறது.

வரலாறு: போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் முதன்முதலில் 1987 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபையால் அனுசரிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் (UNODC) வெளியிட்டுள்ள உலக மருந்து அறிக்கை 2017-ன் படி, 25 கோடி மக்கள் (உலக அளவில் 5.3% மக்கள்) 2015-ல் ஒரு முறையாவது போதைமருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர். இவர்களில், சுமார் 3 கோடி மக்கள் (உலக அளவில் 0.6 சதவீதம்) போதைப்பொருள் பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2020க்கான கருப்பொருள்

2020: சிறப்பாக கவனிக்க சிறந்த அறிவு: சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம்-2020 க்கான “சிறப்பாக கவனிக்க சிறந்த அறிவு” என்ற கருப்பொருள் உலக போதைப்பொருள் பிரச்சினையைப் புரிந்து கொள்ளும் தன்மையை மேம்படுத்துவதன் அவசியத்தை, சிறந்த அறிவு அதிக அளவில் பேணப்படும் சுகாதாரம், ஆளுமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பு மூலம் மேற்கொள்ள வலியுறுத்துகிறது.

2019: நீதிக்கான ஆரோக்கியம். ஆரோக்கியத்திற்கான நீதி- போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்போது நீதியும் ஆரோக்கியமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை கருப்பொருள் வலியுறுத்துகிறது.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் போதைக்கு அடிமையாதல் என்றால் என்ன?

சட்டபூர்வமான அல்லது சட்டவிரோதமான பொருளை நீங்கள் பயன்படுத்த கூடாத வகையில் பயன்படுத்தும்போது போதைப்பொருள் பயன்பாடு ஏற்படுகிறது. உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளின் வழக்கமான அளவை விட அதிகமாக நீங்கள் எடுத்துக் கொண்டாலோ அல்லது உங்களுக்கு பரிந்துரைக்கப்படாத மாத்திரைகளை நீங்கள் அதிகமாக பயன்படுத்தினாலோ, போதைப்பொருள் பயன்படுத்தும் போது நீங்கள் நிம்மதியாக இருப்பதாக உணர ஆரம்பிக்கும் போதோ அல்லது யதார்த்தத்தைத் தவிர்க்க விரும்பினாலோ நீங்கள் போதை பழக்கத்திற்கு உட்பட்டுள்ளீர்கள் என சொல்லலாம்.

நீங்கள் அதற்கு அடிமையாக இல்லாவிட்டால், இந்த தேவையற்ற பழக்கவழக்கங்களை நீங்கள் கட்டுப்படுத்தவோ அல்லது அவற்றை முழுவதுமாக கைவிடவோ முடியும். போதை மருந்துகள் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. நிதி நெருக்கடி இருந்தாலும், உங்களுடன் அன்பாக இருப்பவர்களின் உறவு பாதிக்கும் நிலை வந்தாலும் போதை பழக்கம் அதிலிருந்து உங்களை மீள விடாது

இந்தியாவில் போதைப்பொருள்

கடந்த இருபது ஆண்டுகளாக , போதைப்பொருள் நுகர்வு நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது. பிப்ரவரி 2019 இல், புது தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) தேசிய மருந்து சார்பு சிகிச்சை மையம் (என்.டி.டி.டி.சி) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் நடத்தப்பட்ட “இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாட்டின் அளவு” என்ற தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

தேசிய அளவில் 10 வயது முதல் 75 வயது வரையுள்ள 14.6 விழுக்காடு மக்கள் (சுமார் 16 கோடி) தற்போது மது அருந்துகின்றனர்

கடந்த 12 மாதங்களுக்குள் சுமார் 2.8 விழுக்காடு இந்தியர்கள் (3.1 கோடி மக்கள்) ஏதாவது ஒரு கஞ்சா பொருளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கணக்கெடுப்பின் போது சுமார் 2.06 விழுக்காடு மக்கள் அபின் பயன்படுத்துவதாகக் கூறினர். சுமார் 0.55 விழுக்காடு இந்தியர்களுக்கு அபின் பயன்பாட்டு பிரச்சினைகளுக்கு உதவி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது

தேசிய அளவில், சுமார் 8.5 லட்சம் பேர் போதை மருந்துகளை ஊசி மூலம் செலுத்துக் கொள்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

முக்கிய அம்சங்கள்

டெல்லி-அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தேசிய மருந்து சார்பு சிகிச்சை மையம் (என்.டி.டி.டி.சி) கணக்கெடுப்பு ஆய்வுகள் படி இந்தியாவில் 5.7 கோடி மக்கள் மது தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுபவர்களாக உள்ளனர்.

இந்தியா முழுவதும் 16 கோடி மக்கள் மது அருந்துகிறார்கள், மது அருந்துவதில் பெண்களை விட ஆண்கள் 17 மடங்கு அதிகமாக உள்ளனர்.

திரிபுரா, ஆந்திரா, பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் மது அருந்துதல் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 1.8 மில்லியன் பெரியவர்களுக்கு உள்ளிழுக்கும் போதைமருந்து பயன்பாடு உள்ளது.

25 லட்சம் பேர் கஞ்சாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 77 லட்சம் நபர்களுக்கு அவர்கள் அபின் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உதவி தேவைப்படுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது

உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிகமாக கஞ்சா பயன்படுத்துபவர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.

ஹெராயின் தற்போதைய பயன்பாடு 1.14% ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து மருந்துவ பயன்பாட்டிற்கான அபின் (தற்போதைய பயன்பாடு 0.96%), ஓபியம் (தற்போதைய பயன்பாடு 0.52%) என்ற அளவில் உள்ளது. இந்த முறைகேடுகள் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அதிகமாக காணப்படுகிறது.

போதைக்கு அடிமையானவரை எவ்வாறு அடையாளம் காண்பது - போதைப் பழக்கத்தின் அறிகுறிகள்

  • பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்துதல்
  • போதை மருந்து கிடைக்காத போது தீவிரமாக அறிகுறிகளைக் காணலாம்
  • சண்டை போடுவது போன்ற நடத்தை மற்றும் பண சிக்கல்கள்
  • பொழுதுபோக்கு, விருப்பமானவை, மற்றும் நடத்தையில் மாற்றங்களை காணலாம்
  • அலைபாயும் மனம்
  • பதட்டமாகவும் பிரமை பிடித்த மாதிரியும் இருப்பது
  • அடிக்கடி மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவந்திருத்தல் மற்றும் உடலில் ஊசி குத்திய தடம்
  • வழக்கமான வீட்டு வேலைகளை செய்ய இயலாமை
  • அதிகமான அல்லது மிக குறைவான தூக்கம்
  • உறவு முறைகளில் திடீர் மாற்றங்களை சிலசமயம் காணலாம்
  • உடல் எடை குறைவது அல்லது அதிகரிப்பது போன்ற திடீர் எடை மாற்றங்கள்
  • பதற்றமான, குழறும் பேச்சு

நமது அன்புக்குரியவர்கள் போதைப்பொருள் பிரச்சினை இருக்கும்போது என்ன செய்ய வேண்டும்:

இந்த அறிகுறிகளை நீங்கள் கவனித்து, உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் யாரேனும் போதைப்பொருள் பிரச்சினையில் சிக்கியிருப்பதாக சந்தேகித்தால், உங்கள் பொது மருத்துவரிடமிருந்து உடனடி உதவியைப் பெறுங்கள் அல்லது நீங்கள் நம்பக்கூடிய ஒருவரை அணுகவும்

மேலும், பாதிக்கப்பட்ட நபரை ஒரு போதை நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும், அவர் போதைப் பழக்கத்தின் வரலாறு, பயன்படுத்தும் அளவு அல்லது குடும்பத்தில் யாரேனும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்பட்டதா போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு சிகிச்சை முறைகளை பரிந்துரைப்பார்.

போதைப்பொருள் பயன்படுத்தியதால் அவர்களின் உடலும் மனமும் பாதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ மற்றும் உளவியல் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிகிச்சையில் போதைப்பொருள், மறுவாழ்வு, சிகிச்சை, சிகிச்சைக்கு பிந்திய பராமரிப்பு ஆகியவை அடங்கும். இந்த நீண்ட செயல்முறை சில நேரங்களில் வருத்தம் தருவதாகவோ அல்லது விரிவானதாகவோ இருக்கக் கூடும்.

போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தொடர்பான தேசிய திட்டங்கள்:

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MSJE), இந்திய அரசு ஆகியவை மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்கும் கொள்கைகள் மற்றும் போதை மறுவாழ்வு திட்டத்தில் (DDAP) ஈடுபட்டுள்ளன.

ஆல்கஹால் e-ஹெல்ப் போன்ற போதைப்பொருள் தடுப்பு தொடர்பான பல்வேறு e-சுகாதார வலைதள அடிப்படையிலான திட்டங்கள் தேசிய மருந்து சார்பு சிகிச்சை மையத்தால் நடத்தப்படுகிறது. (alcoholwebindia.in/intervention)

ஆல்கஹால் ஈ-ஹெல்ப் போன்ற போதைப்பொருள் தடுப்பு தொடர்பான பல்வேறு மின்-சுகாதார வலை அடிப்படையிலான திட்டங்கள்

புகையிலை இடைநிறுத்த திட்டம் இந்திய அரசாங்கத்தின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ளது.(nhp.gov.in/quit-tobacco)

ஊசி மூலம் போதைமருந்து பயன்படுத்துபவர்களுக்கு ஊசி மற்றும் சிரிஞ்ச் திட்டம் மற்றும் அபின் மாற்று சிகிச்சை போன்ற பல்வேறு திட்டங்களை இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் மூலம் செயல்படுத்தி வருகிறது.

சமூக பாதுகாப்பு சேவைகளுக்கான குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான ஒரு திட்டத்தை சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகம் வகுத்துள்ளது, இது 2015 இல் புதுப்பிக்கப்பட்டது.

மத்திய அரசின் வருவாய்த் துறை, போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம்-1985 மற்றும் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருள்களில் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் சட்டம், 1988 ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது;

உள்துறை அமைச்சகத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தை அமலாக்கும் நிறுவனமாக செயல்படுகிறது.

இதையும் படிங்க: சைபர் தாக்குதல்: ஹேக் செய்யப்பட்ட அரசு சர்வர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.