ETV Bharat / bharat

இன்டெல் முதலீடு: அம்பானி காட்டில் மழை; ஜியோ தளத்தில் குவியும் முதலீடுகள்! - இன்டெல் ஜியோ ஒப்பந்தம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தளத்தில் 0.39 விழுக்காடு பங்குகளை வாங்க, இன்டெல் ரூ. 1894.50 கோடியை முதலீடு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இன்டெல்-ஜியோ ஒப்பந்தத்தின் மூலம், ரிலையன்ஸ் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் 12ஆவது முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ முதலீடு
ஜியோ முதலீடு
author img

By

Published : Jul 3, 2020, 5:21 PM IST

மும்பை: ஜியோவில் 0.39 விழுக்காடு பங்குகளை இன்டெல் நிறுவனம் வாங்கியுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் ஜியோ தளத்தில் இன்டெல் நிறுவனத்தின், முதலீட்டு கிளை நிறுவனமான இன்டெல் கேபிடல் நிறுவனம் 0.39 விழுக்காடு பங்குகளை 1,894.50 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பங்கு மதிப்பு ரூ. 4.91 லட்சம் கோடியாகவும், நிறுவன மதிப்பு 5.16 லட்சம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதுவரையில் 12 நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடுகள் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு லட்சத்து, 17ஆயிரத்து 588.45 கோடி ரூபாயை திரட்டியுள்ளது.

தற்போது இன்டெல் கேபிடல் முதலீடு செய்திருக்கும் 1,894.50 கோடி ரூபாயையும் சேர்த்து, இதுவரையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒரு லட்சத்து, 17ஆயிரத்து 588.45 கோடி ரூபாயை திரட்டியுள்ளது. இதே அளவில் ஜூன் 13ஆம் தேதி எல் காட்டர்டன் நிறுவனம் 0.39 விழுக்காடு ஜியோ தளத்தின் பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அம்பானியிடமிருந்து ரூ.1200 கோடியை மீட்க என்.சி.எல்.டியை நாடும் எஸ்.பி.ஐ!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தளத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் என்ன என்பதை கீழே காணலாம்.

  1. ஏப்ரல் 22 அன்று 43,574 கோடி ரூபாயை முதலீடு செய்த ஃபேஸ்புக் நிறுவனம், அதன் மூலம் 9.99 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
  2. மே 4 அன்று 5,656 கோடி ரூபாய் முதலீடு செய்த சில்வர் லேக் நிறுவனம் 1.15 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
  3. மே 8 அன்று 11,367 கோடி ரூபாய் முதலீடு செய்த விஸ்டா நிறுவனம் 2.32 விழுக்காடு பங்குகளை வாங்கியுள்ளது.
  4. மே 17 அன்று 6,598 கோடி ரூபாய் முதலீடு செய்த ஜெனரல் அட்லாண்டிக் 1.34 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
  5. மே 22 அன்று 11,367 கோடி ரூபாய் முதலீடு செய்த கேகேஆர் நிறுவனம் 2.32 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
  6. ஜூன் 5ஆம் தேதி 9,093 கோடி ரூபாய் முதலீடு செய்த முபாதலா நிறுவனம் 1.85 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
  7. ஜூன் 5ஆம் தேதி அன்று சில்வர் லேக் நிறுவனம் மீண்டும் 4,547 கோடி ரூபாய் முதலீடு செய்து கூடுதலாக 0.93 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
  8. ஜூன் 8ஆம் தேதி அன்று அபுதாபி நிறுவனமான ஏடிஐஏ 5,863.50 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1.16 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
  9. ஜூன் 13: டிபிஜி நிறுவனம் 4,546.80 கோடி ரூபாய் முதலீடு செய்து 0.93 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
  10. ஜூன் 13 அன்று எல் காட்டர்டன் நிறுவனம் 0.39 விழுக்காடு பங்குகள் மூலம் 1894.50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
  11. ஜூன் 18 தற்போது சவுதியின் பிஐஎஃப் 2.32 விழுக்காடு பங்குகளை வாங்கி 11,367 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
  12. ஜூலை 2ஆம் தேதி, இன்டெல் நிறுவனம் 0.39 விழுக்காடு பங்குகளில் 1,894.50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.