கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், வெவ்வெறு மாநிலங்களில் பணிபுரிந்துவந்த வெளிமாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் சாலைகளில் நடந்தும், லாரிகள் மூலமாகவும் தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு சிறப்பு ரயில் சேவைகளை தொடங்கியது. அந்த வகையில், வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக, மேற்கு வங்க மாநில போக்குவரத்து கழகம் ஏராளமான பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், அலிபுர்துவாரில் பேருந்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களுக்கு (பிபிஇ கிட்டுக்கு) பதிலாக கிழிந்த ரெயின்கோட் பயன்படுத்துவதைக் காண முடிந்தது. இந்த ரெயின்கோட்டும் கையுறைகள் மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் கையுறைகள் ஒருமுறை பயன்படுத்திய பிறகு அவை கிழிந்துவிடுவதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மேற்கு வங்க மாநில போக்குவரத்து கழகத்தின் இயக்குநர் மிருதுல் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாபர் மசூதி வழக்கு: வழக்காடல்கள் காணொலி மூலம் நடைபெறும் என அறிவிப்பு!