வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் நிதி பரிவர்த்தனைக்காக உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு பதிலாக பிரத்யேக ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை மத்திய அரசு அண்மையில் உருவாக்கியுள்ளது. ஐ.எஃப்.எஸ்.சி.ஏ. என்ற இந்த அமைப்பு(IFSCA) குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள கிஃப்ட் சிட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.
இந்த அமைப்பின் முதல் தலைவராக ஐ.ஏ.எஸ் அலுவலர் இன்ஜெதி சீனிவாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் பணியாற்றிய சீனிவாஸ் திவால் சட்டம் எனப்படும் ஐ.பி.சி. சட்டத்தை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவரின் பதிவிக்காலம் மூன்றாண்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சர்வதேச நிதி பரிவர்த்தனைக்கும் ஒழுங்குமுறை பணிகளை இந்த அமைப்பு பிரத்யேகமாக மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு - அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை