நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். உயிரிழப்போரை சகாதாரத் துறை ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தப்படி நல்ல முறையில் அடக்கம் செய்து வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் கரோனா அச்சத்தினால் பொறுபற்ற முறையில் அடக்கம் செய்யப்படும் காணொலி வெளியாகி அவ்வப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், கர்நாடகா மாநிலம் தாவனகரே மாவட்டத்தில் மெக்கான் மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரை அடக்கம் செய்ய சுகாதார துறையினர், ஜேசிபி இயந்திரத்தில் சடலத்தை எடுத்து சென்று குழியில் தள்ளி அடக்கம் செய்யும் காணொலி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பேசிய தாவனகரே மாவட்ட ஆட்சியர் மகாந்தேஷ் பெலகி, “ஜேசிபியில் சடலங்கள் கொண்டு செல்லும் காணொலியை பார்த்தேன். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாது” என உறுதியளித்தார்.