தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் 80ஆவது பிறந்தநாள் இன்று (டிசம்பர் 12) கொண்டாடப்படுகிறது. பல முன்னணித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சரத் பவாரின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத், சரத் பவாருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்.
அப்போது, 1999 காலகட்டத்தில் நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு சரத் பவாருக்கு கிடைத்தது. அப்போது காங்கிரஸ் கட்சியில் வாக்கெடுப்பு வைத்திருந்தால் 80 விழுக்காடு ஆதரவு சரத் பவாருக்கே கிடைத்திருக்கும். ஆனால் சில தாழ்வு மனப்பான்மை கொண்ட நபர்களின் சதிச் செயல் காரணமாக சரத் பவார் உயரத்திற்கு வர முடியாமல் தடுக்கப்பட்டது.
இருப்பினும் தற்போதும் அவருக்கான வாய்ப்புகள் உள்ளன. சரத் பவார் போன்ற தலைவருக்கு வயது ஒரு தடையில்லை எனத் தெரிவத்தார்.
1999ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவராக இருந்த சரத் பவார் சோனியா காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் நிறுவினார்.
இதையும் படிங்க: லாலு யாதவின் சிறுநீரகம் மிக மோசமான நிலையில் உள்ளது: மருத்துவர் தகவல்