ETV Bharat / bharat

'ஐ.என்.எஸ். கவராட்டி' நாளை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது! - கமோர்த்தா ரக நீர்முழ்கி எதிர்ப்பு போர்முறை கப்பல்

ஹைதராபாத் : இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான நீர்மூழ்கி கப்பல் ‘ஐ.என்.எஸ். கவராட்டி’ இன்று (அக்.22) இந்திய கடற்படையில் படையில் இணைக்கப்படவிருப்பதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

'ஐ.என்.எஸ். கவராட்டி' நாளை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது!

author img

By

Published : Oct 22, 2020, 5:55 AM IST

கமோர்த்தா ரக நீர்முழ்கி எதிர்ப்பு போர்முறை கார்வெட் கப்பல்களில் திட்டம் 28இன் கீழ் நான்காவதாக உருவாக்கப்பட்ட ஐ.என்.எஸ் கவராட்டி வெற்றிகரமாக கடல் சோதனைகளில் தேர்ச்சி பெற்றது.

இந்நிலையில், இந்த புதிய போர்க்கப்பல் நாளை (அக்.22) விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள விழாவில் ராணுவத் தளபதி ஜெனரல் முகுந்த் நரவனே நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

90% உள்நாட்டு உள்ளடக்க கட்டுமானத்தால் ஆன இந்த போர் கப்பலின் வடிவமைப்பை இந்திய கடற்படையின் துணை அமைப்பான கடற்படை வடிவமைப்பு இயக்குநரகம் (டி.என்.டி) வழங்கியது.

கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (ஜி.ஆர்.எஸ்.இ) நிறுவனத்தால் ஒத்துழைப்புடன் உருபெற்ற இந்த கப்பல் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் நோக்கத்தை பறைசாற்றுவதாக உருவாகியுள்ளது.

‘ஐ.என்.எஸ். கவராட்டி' மேம்பட்ட தகவல் தொழில்நுட்பங்கள் மற்றும் எதிரிக் கப்பல்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது.

இத்தகைய நீர்மூழ்கி கப்பல் கடற்படையின் மரபு சார்ந்த நீர்மூழ்கிகளின் மையமாக இருக்கும் என கடற்படை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கியான இதனை வைத்து கடற்படையினர், சில காலம் பயிற்சி மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின்னர் நாட்டிற்காக கடற்படையில் நாளை ஒப்படைக்கப்பட உள்ளது.

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் தலைநகரான கவராட்டியின் நினைவாக இந்த கப்பலுக்கு ஐ.என்.எஸ் கவராட்டி என பெயரிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.