உலகளவில் முதலீட்டு தர வகையிலிருந்து துணை முதலீட்டு தரத்திற்கு சரியும் நிறுவனங்கள் "ஃபாலன் ஏஞ்சல்ஸ்" என குறிப்பிடப்படுகின்றன.
அந்த வகையில், இந்தியாவின் நிதித் துறையை சாராத பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஆயில் இந்தியா, பெட்ரோனெட் எல்.என்.ஜி, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், எண்ணெய் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் ஆகிய ஆறு நிறுவனங்களும் ஃபாலன் ஏஞ்சல்ஸ் பட்டியலின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாக உலகளாவிய பொருளியல் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் அறிவித்துள்ளது.
அரசு நடத்தும் இந்த ஆறு பொதுத் துறை நிறுவனங்களின், கடன் பத்திரங்கள் 1 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்படுகிறது. அவை 2021ஆம் நிதியாண்டில் முதிர்ச்சியடைந்து, திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆறு நிறுவனங்களின் அனைத்து அடிப்படை கடன் விவரங்களும் அதையே குறிப்பிடுகின்றன. இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு, கோவிட்-19 கூடுதல் காரணமாக மட்டுமே உள்ளதாக கூறுகின்ற ஆய்வுக்கு இது ஆதாரமாக விளங்குகிறது. மேலும், அவற்றின் இறுதி மேலதிக பொருளியல் நடவடிக்கைகள் அனைத்தும் நிலை மதிப்பீட்டைக் குறைப்பதன் மூலம் இயக்கி வருகின்றன என்றபோதிலும் அவற்றின் அடிப்படை கடன் சுயவிவரங்களில் சரிவு ஏற்படாது என்றும் அவ்வாய்வு கூறுகிறது.
ஃபாலன் ஏஞ்சல்ஸ் பட்டியலில் இந்த ஆறு நிறுவனங்கள் இணைக்கப்படுவதற்கு முன்பு ஆசிய கண்டத்தில் 21 நிறுவனங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இந்த 21 நிறுவனங்களும் 2021ஆம் ஆண்டில் முதிர்ச்சியடைந்த 12.3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் பத்திரங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு அதாவது, 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் பத்திரங்களை ஆறு இந்திய நிறுவனங்கள் வசமுள்ளது.
2008ஆம் ஆண்டு முதல், ஃபாலன் ஏஞ்சல்ஸ் பட்டியலில் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனங்களும் இடம் பிடிக்கத்தொடங்கி உள்ளன. உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட் -19 பரவல் காரணமாக எழுந்த பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து, இப்பட்டியலில் உள்ள பெயர்களின் அளவு இரட்டிப்பாகியுள்ளதாக அறிய முடிகிறது.