ETV Bharat / bharat

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை திறந்து வைக்கவுள்ள மோடி!

மூவாயிரத்து இருநூறு கோடி ரூபாய் மதிப்பில் மணாலியை லேவுடன் இணைக்கும் அடல் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி அக். 3ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.

indias-pride-atal-tunnel-ready-pm-modi-will-inaugurate-on-october-3rd

author img

By

Published : Sep 25, 2020, 9:55 PM IST

நாட்டின் மிகச்சிறந்த பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பத்து வருட கடின உழைப்பிற்குப் பிறகு, ரோஹ்தாங் அடல் சுரங்கம் இப்போது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இந்த சுரங்கப்பாதையை நிர்மாணிப்பதற்கான யோசனை சுமார் 160 ஆண்டுகள் பழமையானது. இது இந்த ஆண்டு முதல் செயல்படப் போகிறது.

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை: மணாலியை லேவுடன் இணைக்கும் அடல் சுரங்கப்பாதை பணி இறுதியாக 10 ஆண்டுகளுக்குப் பின் முடிவடைந்துள்ளது. முதலில் இது 6 ஆண்டுகளில் தயார் செய்யப்படும் என திட்டமிடப்பட்டது. பின்னர் மேலும் 4 ஆண்டுகள் நேரம் தேவைப்படும் என கூறப்பட்டது. இந்தநிலையில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, அக். 3ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதையை வடிவமைத்த ஆஸ்திரேலிய நிறுவனமான ஸ்னோவி மவுண்டன் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (எஸ்.எம்.இ.சி) வலைத்தளத்தின்படி, ரோஹ்தாங் சுரங்கப்பாதை அமைப்பதற்கான முதல் யோசனை மொராவியன் மிஷன் 1860இல் முன்வைத்தது. உலகின் மிக நீளமான இந்த சுரங்கப்பாதை, கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் உயரத்தில் சுமார் 3200 கோடி ரூபாய்க்கு கட்டப்பட்டுள்ளது.

அடல் சுரங்கப்பாதை 10,000 அடிக்கு மேல் நீளமானது. இது மணாலிக்கும் லேக்கும் இடையிலான தூரத்தை 46 கி.மீ. குறைக்கும்.

மணாலியை லேவுடன் இணைக்கும் அடல் சுரங்கம் உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கமாகும். ஒவ்வொரு 60 மீட்டருக்கும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், சுரங்கப்பாதையின் உள்ளே ஒவ்வொரு 500 மீட்டருக்கும் அவசரகால வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை காரணமாக, மணாலி முதல் லே வரையிலான தூரம் 46 கி.மீ. குறைக்கப்படும், இது 4 மணி நேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும்.

எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களையும் தவிர்க்க தீ ஹைட்ராண்டுகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் அகலம் 10.5 மீட்டர். இது இருபுறமும் கட்டப்பட்ட 1 மீட்டர் நடைபாதைகளையும் கொண்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை கட்டுமானத்தின் போது தொழிலாளர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சுரங்கத்தின் ஒரு முனை வடக்கில் ரோஹ்தாங்கிற்கு அருகில் உள்ளது, அங்கு ஒரு வருடத்தில் 5 மாதங்கள் மட்டுமே வேலை செய்ய முடியும் நிலை இருந்தது.

அடல் சுரங்கப்பாதை திட்டத்தின் செலவு 2010இல் 1,700 ரூபாயிலிருந்து 2020 செப்டம்பர் மாதத்திற்குள் 3,200 கோடி ரூபாயாக உயர்ந்தது.

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில், ரோஹ்தாங்கில் ரோப்வே கட்டும் திட்டம் இருந்தது. பின்னர், பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கத்தின் கீழ், மணாலிக்கும் லேவுக்கும் இடையில் ஆண்டு முழுவதும் இணைப்பு வழங்குவதற்கான சாலையை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த திட்டம் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசு ஆட்சியில் இருந்தபோது உறுதியானது.

கிழக்கு பிர் பஞ்சால் மலைத்தொடரில் 9.02 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை லே - மணாலி நெடுஞ்சாலையில் உள்ளது. இது சுமார் 10.5 மீட்டர் அகலமும் 5.52 மீட்டர் உயரமும் கொண்டது.

சுரங்கப்பாதையில் ஒரு காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ. இந்த சுரங்கப்பாதை மணாலியை லஹால் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்குடன் இணைக்கும். இது மணாலி - ரோஹ்தாங் - சர்ச்சு - லே நெடுஞ்சாலையில் 46 கிலோமீட்டர் தூரத்தை குறைக்கும். மேலும் பயண நேரமும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் குறையும்.

இதையும் படிங்க: ஆரோக்கிய சேது செயலியின் பதிவிறக்கம் 90 விழுக்காடு குறைந்துள்ளது"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.