ETV Bharat / bharat

எரிபொருள் துறை வளர்ச்சி பாதைக்கு திரும்ப குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும்!

டெல்லி : கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து இந்தியாவின் எரிபொருள் தேவையாது, கோவிட் முந்தைய நிலையின் 85 விழுக்காட்டை எட்டியுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

எரிபொருள் துறை வளர்ச்சி பாதைக்கு திரும்ப குறைந்தது 2 ஆண்டு ஆகும்

author img

By

Published : Jun 16, 2020, 6:19 PM IST

நாடு தழுவிய ஊரடங்கிற்கு பிறகான வீழ்ச்சியிலிருந்து பொருளாதாரத்தை மீட்பது குறித்து இந்திய பெட்ரோலிய வர்த்தக சபையின் தொழில்துறை தலைவர்களுடன் அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், "நாடு தழுவிய அளவில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட ஊடரங்கால், உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வு தேசமான இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு எரிபொருள் விற்பனை குறைந்துள்ளது. மே மாத தொடக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், 70 விழுக்காடு வீழ்ச்சியிலிருந்து மீண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் ​​ஜூன் முதல் பதினைந்து நாள்களில் பெட்ரோலிய தயாரிப்பு தேவை கோவிட்-19 முந்தைய நிலைகளில் நிலவியபடி 80 விழுக்காட்டிலிருந்து 85 வரை உயர்ந்துள்ளது. மே மாதத்தில் எரிபொருள் நுகர்வாளர்களால் பயன்படுத்தப்பட்ட 14.65 மில்லியன் டன் எரிபொருள் ஏப்ரல் மாதத்தை விட 47.4 விகிதம் அதிகமாகி இருக்கிறது.

ஆனால் முந்தைய ஆண்டை விட 23.3 விழுக்காடு குறைவாக இருந்தது. மே மாதத்தில் டீசல் விற்பனை 29.4 விழுக்காடு குறைந்துள்ளது. பெட்ரோல் விற்பனை 35.3 விழுக்காடு சரிந்துள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, டீசல் தேவை 2.67 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 விழுக்காடு குறைவென தொழில்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

9 லட்சத்து 30 ஆயிரம் டன்களில் பெட்ரோல் விற்பனையை பதிவு செய்த கடந்த ஆண்டை விட 18 விழுக்காடு குறைவாகவே இந்தாண்டு ஜூன் மாத மதிப்பீடு செய்யப்படுகிறது. ஏடிஎஃப், விமான நிறுவனங்கள் நடவடிக்கைகளை நிறுத்தியதால் கிட்டத்தட்ட இந்த விற்பனை சரிந்ததாக அறிய முடிகிறது. ஜூன் முதல் பாதியில் சென்ற ஆண்டு இருந்ததை விட 73 விழுக்காடு குறைவாக பதிவாகியுள்ளது. சமையல் எரிவாயு (எல்.பி.ஜி ) விற்பனை 7 விழுக்காடு அதிகரித்து, 9 லட்சத்து 60 ஆயிரம் டன்னாக பதிவாகி உள்ளது.

இந்த காணொலி சந்திப்பில் பேசிய இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் (ஐஓசி) தலைவர் சஞ்சீவ் சிங், "எரிபொருள் துறை வளர்ச்சிப் பாதை திரும்ப இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். எரிபொருள் நுகர்வு தேவை 2017-2018ஆம் ஆண்டில் 5.96 விழுக்காடு உயர்ந்து 206.2 மில்லியன் டன்னாக பதிவானது. 2018-19ஆம் ஆண்டில் 3.4 விழுக்காடு அதிகரித்து 213.2 மில்லியன் டன்னாக உயர்ந்தது. 2019-20ஆம் ஆண்டில் எரிபொருள் தேவை கிட்டத்தட்ட 213.7 மில்லியன் டன்களாக இருந்தது.

மந்தமான பொருளாதார நடவடிக்கை காரணமாக 2019-20 நிதியாண்டில் (ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2020 வரை) எரிபொருள் விற்பனை வேகத்தை இழப்பதற்கு முன்பு, அதன் நுகர்வோர் பயன்பாட்டுத் தேவை 4 விழுக்காடு முதல் 5 வரை வளர்ந்திருந்தது. ஆண்டுதோறும் எரிபொருள் நுகர்வோர் தேவை 4 விழுக்காடு முதல் 5 வரை அதிகரிக்கும் வகையிலான வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கு 2 ஆண்டுகள் வரை ஆகும்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இணையவழி விநியோகம் அடைப்படையிலான நாட்டின் முதலாவது எரிவாயு வர்த்தக அமைப்பான இந்தியன் கேஸ் எக்ஸ்சேஞ்ச் அமைப்பை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் நேற்று (ஜூன் 15) தொடக்கிவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.