உலகளவில் மக்கள் எதை நினைத்து கவலை கொள்கிறார்கள் என இப்ஸோஸ் (ipsos) நிறுவனம் சர்வே ஒன்றை கணக்கிட்டு வெளியிட்டுள்ளது. சுமார் 28 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில், கவலை கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 22-வது இடத்தை பிடித்துள்ளது.
இதில், இந்தியர்கள் பயங்கரவாதம், வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரம் மற்றும் அரசியல் ஊழல்கள் குறித்து அதிகம் கவலை கொள்வதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. புல்வாமா தாக்குதல், நாட்டில் தொடரும் அதிக வேலைவாய்ப்பின்மையும் தான் மக்களை கவலை கொள்ள வைத்துள்ளதாக அந்நிறுவனத்தை சேர்ந்த பரிஜத் சக்ரபோர்தி தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்தியாவில் 73 விழுக்காடு மக்கள், நாடு சரியான தலைமையில் செயல்படுகிறது என நம்புவதாகவும் சர்வே தகவல் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு வாழும் மக்களில் பத்தில் ஒன்பது பேர், நாடு சரியான தலைமையில் செயல்படுகிறது என நம்புகின்றனர். பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா இடம் பெற்றுள்ளது.