கடந்த சில மாதங்களாகவே இந்திய எல்லையான லடாக், கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் தங்களது ராணுவ வீரர்களைக் குவித்துவந்தன.
ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்த நிலையில், சீனா தனது பாதுகாப்புப் படையினரைக் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பப்பெற்றது.
இச்சூழலில் நேற்று (ஜூன் 16) இரு நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே லடாக்கில் ஏற்பட்ட வன்முறையில், சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
அதேபோல், இந்தியத் தரப்பிலும் 20 பேர் வீரமரணமடைந்தனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. லடாக் பகுதியில் தற்போது குளிராக இருப்பதால் உயிர் இழப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியா-சீனா மோதல்: உஷார்நிலையில் இமாச்சலப் பிரதேசம்!