ETV Bharat / bharat

மீண்டு(ம்) வரும் இந்திய ரயில்வே!

நாட்டின் வளர்ச்சிக்கு முகமாக திகழவேண்டிய இந்திய ரயில்வே, சமீப காலமாக பெரும் பின்னடைவையே சந்தித்துவருகிறது.   கடந்த 65 ஆண்டுகளாக உட்கட்டமைப்பில் இந்திய ரயில்வே, வெறும் 30 விழுக்காடு வளர்ச்சியை மட்டுமே அடைந்துள்ளதுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். இது நமது ரயில்வேயின் மந்தமான வளர்ச்சிக்கு ஒரு சான்றாகும்.

Indian Railway
Indian Railway
author img

By

Published : Dec 30, 2019, 6:20 PM IST

Updated : Dec 30, 2019, 8:00 PM IST

மத்திய கணக்கு தணிக்கையாளர், தனது அறிக்கையில், இந்திய ரயில்வே தான் சம்பாதிக்கும் பெரும்பாலான வருவாயை செலவழித்துவிடுகிறது என்றும், இதனால் ரயில்வேயின் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

2030ஆம் ஆண்டுக்குள் ரயில்வே துறையை மீண்டும் லாபகரமானதாக மாற்ற மத்திய அரசு சுமார் 50 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள முழுத்தொகையையும் முதலீடு செய்யும்முன், ரயில்வே துறையை முழுவதுமாக மறுசீரமைப்பு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இம்மாத தொடக்கத்தில், ரயில்வே துறை சார்பில் 'பரிவர்தன் சங்கோஷ்டி' எனப்படும் மாற்றத்துக்கான கருத்தரங்கு தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. ரயில்வே துறையை முற்றிலும் மறுசீரமைப்பு செய்வது குறித்து நடத்தப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ரயில்வே துறையின் முக்கிய அலுவலர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Indian Railway
மீன்டு(ம்) வரும் இந்திய ரயில்வே 1

ரயில்வேயில் இதுவரை நடைமுறையிலிருந்த எட்டு வகையான பணியிடங்களுக்கு பதில் இந்திய ரயில்வே மேலாண்மை சேவை(IRMS) என்ற ஒரே பணியிடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல பாதுகாப்பிற்கும், முன்னிருந்த பல துறைகளுக்கு பதிலாக ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) மற்றும் மருத்துவ சேவை பிரிவு என இரண்டாக சுருக்கப்படுகிறது. பல துறைகள் இருப்பதால் அவர்களை ஒருங்கிணைத்து ரயில்வே துறையை நிர்வகிப்பதில் சிக்கல் உள்ளதால், இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே துறை சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சொல்லப்போனால், ரயில்வே துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து பிரகாஷ் டாண்டன் கமிட்டி (1994), ராகேஷ் மோகன் கமிட்டி (2001), சாம் பிட்ரோடா கமிட்டி (2012) மற்றும் பிபேக் டெப்ராய் கமிட்டி (Bibake Debroy Committee 2015) ஆகிய கமிட்டிகளின் பரிந்துரைகள் இன்னும் தாள்களிலேயே இருக்கின்றன. முறையற்று இயங்கும் ரயில்வே துறையை, எவ்வாறு முறைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக இந்த கமிட்டிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

Indian Railway
மீன்டு(ம்) வரும் இந்திய ரயில்வே 2

'வந்தே பாரத எக்ஸ்பிரஸ்' எனப்படும் ரயில் 18-ஐ தொடங்குவதில் ஏற்பட்ட தாமதமே ரயில்வே துறைகளுக்குள் இருக்கும் ஒத்துழையாமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. வாரியக் குழு உறுப்பினர்களாக உள்ள பலரின் சுயநலப் போக்கை எதிர்கொள்ள, வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்திருப்பது ஒரு தைரியமான முடிவு.

இந்தியன் ரயில்வேசின் மனிதவளத் துறையின் தலைவர், இப்போது தலைமை நிர்வாக அலுவலராக வாரியத் தலைவரின் கீழ் நேரடியாக பணியாற்றுவார். மேலும், வாரியத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் விரிவாக்கம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் நிதி தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிட வேண்டும்.

Indian Railway
மீன்டு(ம்) வரும் இந்திய ரயில்வே 3

கார்ப்பரேட் நிறுவனங்களில் அனுபவமும் நிபுணத்துவமும் உள்ளவர்களைப் பணியமர்த்துவது; பதவி உயர்வுகளில் வயதைவிட செயல்பாடுகள்தான் முக்கியமானது என்பதை தெளிவுபடுத்துதல் - ரயில்வே துறையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு விரும்புவதன் அறிகுறிகளே இவை! மத்திய அரசின் இந்த முடிவு 8,000க்கும் மேற்பட்ட குரூப்-ஏ ஊழியர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும். முன்மொழியப்பட்ட அனைத்து கருத்துகளும் நடைமுறைப்படுத்தப்பட்டால், ரயில்வே துறை முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும்.

அரசியல்வாதிகளால் நம் இந்திய ரயில்வே எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் நிதி மேலாண்மை, உள்கட்டமைப்பு, பயணிகளின் வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவை எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அனைவரும் அறிவர், 1950-2016 காலகட்டத்தில் இந்நிய ரயில்வேயில் பயணித்தோரின் எண்ணிக்கையும் சரக்கு போக்குவரத்தும் முறையே 1344 மற்றும் 1642 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பதை சந்தீப் பாண்டியோபாத்யாய் குழுவின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இருப்பினும், உள்கட்டமைப்பு மற்றும் விரிவாக்கத்தில் 25 விழுக்காடு கூட அதிகரிக்கவில்லை. இந்த அறிக்கை, பல தலைமுறைகளாக ரயில்வே துறை ஆளும் கட்சியனாரலும், உயர் அலுவலர்களாலும் மோசமடைந்துள்ளது என்பதை காட்டுகிறது.

Indian Railway
மீன்டு(ம்) வரும் இந்திய ரயில்வே 4

2023ஆம் ஆண்டிவ் இந்திய ரயில்வே துறையில் ஒரு முழுமையான மாற்றம் நிகழும் என்று மோடி அரசு உறுதியளித்துள்ளது. ஏப்ரல் 2020 முதல், புதிய சிக்னல் முறை நடைமுறைபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ரயில் பாதையை கொண்ட நாடு இந்தியா. அதி வேகம், அதிநவீன வசதிகள் என மேலே குறிப்பிட்டுள்ள நாடுகள் அடுத்தடுத்து சாதனைகளை படைத்துவரும்போதும், நம் நாட்டில் பல ரயில்வே திட்டங்கள் கிடப்பில்தான் போடப்பட்டுள்ளது.

வலுவான கட்டுப்பாட்டு கட்டளைகளை ஏற்படுத்துவதில் இந்தியா இன்னும் பின்தங்கியிருக்கிறது. முன்னதாக மோடி அரசு நாட்டின் வளர்ச்சி விஞ்ஞான ரீதியாக இருக்கும் என உறுதியளித்திருந்தது.

Indian Railway
மீன்டு(ம்) வரும் இந்திய ரயில்வே 5

ரயில்வே துறையை மறுசீரமைப்பு செய்வதில் மட்டும் மோடி அரசு வெற்றிபெற்றுவிட்டால், அது நம் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு பெரிய உதவியாக இருக்கும். ரயில்வே நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை வந்தால் மட்டுமே புதிய ரயில்வே குழு அமைத்துள்ளது ஒரு மைல்கல்லாக மாறும். இது நிச்சயமாக பின்தங்கியுள்ள இந்திய ரயில்வேயை முழு வீச்சுடன் மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்லும் !!

இதையும் படிங்க: முத்ரா திட்டமும், பொதுத்துறை வங்கிகளின் அலட்சியமும்!

Intro:Body:

Railways 

Conclusion:
Last Updated : Dec 30, 2019, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.