ETV Bharat / bharat

நிலக்கரி ஏலத்தை நிறுத்தவும், EIA 2020ஐ திரும்பப் பெறவும் வலியுறுத்தும் தொண்டு நிறுவனங்கள் - நிலக்கரி சுரங்க ஏலம்

பெரும்பாலான நிலக்கரி சுரங்கங்கள் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்திருப்பதால், வணிக ரீதியான நிலக்கரி சுரங்க உரிமத்தை ஏலம் விட முன்வர வேண்டாம் என்று இந்திய மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. அதேபோல், திட்ட முன்அனுமதி மற்றும் பொதுமக்கள் ஆலோசனை செயல்முறையை நீக்குதல் போன்ற விஷயங்கள் தொடர்பாக 2020ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையை திரும்பப் பெறவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன என்று ஈடிவி பாரத் மூத்த நிருபர் சந்திரகலா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

EIA 2020
EIA 2020
author img

By

Published : Sep 12, 2020, 10:02 PM IST

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதாரத்தை விரைவாக புதுப்பிக்க வணிக ரீதியாக நிலக்கரி உரிமங்களை ஏலம் விடுவதற்கு மத்திய அரசு எடுத்துள்ள முடிவு, நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கரி உரிமங்களை ஏலம் விடுவதற்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கவலை தெரிவித்துள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்க நிலக்கரி உரிமத்தை பயன்படுத்துவதை நிறுத்துமாறு அவர்கள் இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளனர், நிலக்கரி சுரங்கங்கள் பெரும்பாலும் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தை எதிர்கொண்டிருக்கும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் தான் அதிகமாக உள்ளன.

இந்தியாவின் ஆத்மா நிர்பர் பாரத் அபியான் மற்றும் பொருளாதாரத்தை புதுப்பிக்கும் ஒரு பகுதியாக செப்டம்பர் 29ஆம் தேதி 41 நிலக்கரி உரிமங்கள் ஏலம் விடப்படுவதற்கு எதிராக டென்மார்க்கை தலைமையிடமாக கொண்ட சர்வதேச உள்விவகாரங்களுக்கான பணிக்குழு மற்றும் டெல்லியை சேர்ந்த சித்ரவதைக்கு எதிரான தேசிய இயக்கம் மற்றும் இந்திய பழங்குடியினர் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை அரசாங்கத்திடம் முறையிட்டன.

மகாராஷ்டிராவில் (3 சுரங்கங்கள்), ஜார்க்கண்ட் (9), ஒடிசா (9), சத்தீஸ்கர் (9) மற்றும் மத்தியப் பிரதேசம் (11) என இந்தியாவின் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கங்கள் பெரும்பாலும் உள்ளன என்று சர்வதேச உள்விவகாரங்களுக்கான பணிக்குழு இயக்குனர் கேத்ரின் வெசன்டோர்ஃப் தெரிவித்தார்.

இந்திய அரசின் எஃகு அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள MSTC லிமிடெட் இணையதளத்தில் கிடைக்கும் 41 நிலக்கரி சுரங்கங்கள் பற்றிய ஆய்வு தொகுப்பில், 30 நிலக்கரி உரிமங்களுக்கு (73%) 1980ஆம் ஆண்டின் வன (பாதுகாப்பு) சட்டத்தின்படி தேவைப்படும் வன அனுமதி பெறவில்லை.

மேலும் 37 நிலக்கரி உரிமத்திற்கு (90%க்கும் அதிகமானவை) சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை 2006இன் கீழ் தேவையான சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்பதை காட்டுகின்றன..

தேவையான சட்ட அனுமதிகளைப் பெறாமல் நிலக்கரி உரிமங்களை ஏலம் விடுவது என்பது இந்த புவியில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பொறுத்தவரை, சட்ட விதிகளுக்கு எதிரானது என்று அவர் கூறினார், 'சுய சார்பு இந்தியா' மூலம் பொருளாதாரத்தை புதுப்பிக்க நிலக்கரியைப் பயன்படுத்துவது என்பது பழங்குடி மக்களை பாதிப்பதாக இருக்கும்.

வரலாற்று ரீதியாக, பழங்குடி மக்கள் இந்தியாவின் வளர்ச்சியைச் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். 1951-1990க்கு இடைப்பட்ட காலத்தில், 21.3 மில்லியன் மக்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் இடம்பெயர்ந்துள்ளனர் என்று இந்தியத் திட்ட ஆணையம் அக்டோபர் 2001இல் கூறியது.

1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 8% மட்டுமே பழங்குடியினர் என்றாலும் அவர்களில் 8.54 மில்லியன் மக்கள், அதாவது 40.1%, பழங்குடியினர் இடம் பெயர்ந்தனர். இந்தியாவின் கோவிட்-19 பொருளாதார மீட்புத் திட்டங்களின் சுமைகளை அவர்கள் மீண்டும் தாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடாது என்று இந்திய பழங்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் திலீப் சக்மா கூறினார்.

ஊரடங்கின் போது, தேசிய வனவிலங்கு வாரியம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வன ஆலோசனைக் குழு உள்ளிட்ட இந்தியாவின் மிக உயர்ந்த ஆலோசனைக் குழுக்கள் மெய்நிகர் கூட்டங்கள் மூலம் அங்கீகரித்த அல்லது அனுமதித்த 30 திட்டங்கள் குறித்து கவலை தெரிவித்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், 2020இன் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையை திரும்பப் பெற கோரிக்கை விடுத்தனர்.

இந்த திட்டங்களில் அருணாச்சல பிரதேசத்தில் திபாங் பள்ளத்தாக்கு திட்டம் என அழைக்கப்படும் எட்டலின் நீர்மின் திட்டம், அசாமில் உள்ள டெஹிங் பட்காய் யானைகள் சரணாலயம் பகுதியில் நிலக்கரி சுரங்க திட்டம், கோவாவின் பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயம் வழியாக அமையவிருக்கும் நெடுஞ்சாலை, கிர் தேசிய பூங்கா சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் சுண்ணாம்பு சுரங்கம், மற்றும் கர்நாடகாவில் உள்ள ஷராவதி சிங்கவால் குரங்குகள் சரணாலயத்தில் புவி தொழில்நுட்ப ஆய்வு ஆகியவை அடங்கும்.

EIA வரைவு-2020ல் கொண்டு வரப்பட்ட மாற்றங்களில் மிக முக்கியமாக, திட்ட முன்அனுமதிக்கான ஏற்பாடுகள், பொதுமக்களின் ஆலோசனை செயல்முறையை நீக்குதல் போன்றவை சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாகும்.

"சட்டத்தின் விதிகள் பழங்குடி மக்களைப் பொறுத்தவரை அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இப்போது அரசாங்கமே பழங்குடி மக்கள் வசிக்கும் நிலங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் சட்டவிரோதத்தை ஊக்குவித்து வருகிறது. சட்டப் பாதுகாப்பு என்பது குறைந்து வருகிறது" என்று சித்திரவதைக்கு எதிரான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுஹாஸ் சக்மா கூறினார்..

நாடு முழுவதுமான ஊரடங்குக்கு மத்தியில், நாடு முழுவதும் உள்ள பூர்வீக மக்கள் அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். ஏப்ரல் 6, 2020 அன்று, குஜராத்தின் டாங் மாவட்டத்தில் உள்ள காமத் கிராமத்தில் கொங்கனி, பில் மற்றும் வார்லி பழங்குடியினரின் குடிசைகளுக்கு வனத்துறை அதிகாரிகள் தீவைத்தனர்.

ஏப்ரல் 24, 2020 அன்று, ஒடிசாவின் காண்டுவல்மாலி வனப்பகுதியில் உள்ள சாகடா கிராமத்தில் வசிக்கும் 32 ஆதிவாசிகளின் வீடுகளை வனத்துறை அதிகாரிகள் இடித்தததால், இலுப்பை மரங்களின் கீழ் பல நாட்கள் வாழ்ந்தனர். ஜூன் 2020இல், தெலுங்கானாவில் உள்ள கணுகபாடு பகுதியைச் சேர்ந்த சத்யாரநாராயணம் கிராமத்தை சேர்ந்த 80 கோயா பழங்குடி குடும்பங்கள் வனத்துறையால் வெளியேற்றப்பட்டனர்.

கோவிட்-19 மீட்புத் திட்டங்களில் நிலக்கரியைச் சேர்க்கக்கூடாது என்ற ஐ.நா பொதுச்செயலாளரின் பரிந்துரைகளை அமல்படுத்தவும், ஏலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை ரத்துசெய்து, நாட்டின் பழங்குடியின மக்களுக்கு கோவிட்-19 மீட்புத் திட்டத்தை செயல்படுத்தவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.