18 மில்லியனுக்கும் அதிகமான இந்தியப் புலம்பெயர்ந்தோர், வெளிநாடுகளில் மிகப்பெரிய சமூகம் என்ற பெருமையைத்தக்க வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுள் குடியுரிமை பெறாத இந்தியர்கள், இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள் என அழைக்கப்படுபவர்கள் அடங்கியுள்ளனர். அவர்களை வரவேற்கும் நாடுகளில் அவர்கள் தரும் பங்களிப்புகள் பரவலாக ஒப்புக் கொள்ளப்படுகின்றன.
மதிப்பீடுகளின்படி, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகள், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் முறையே 3.4 மில்லியன், 2.6 மில்லியன், 2.4 மில்லியன் இந்தியர்கள் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சமீபத்திய இந்தியப் பயணத்தின்போது அமெரிக்காவிற்கு 4 மில்லியன் வலுவான, செல்வாக்குள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்களின் பங்களிப்பினை நினைவு கூர்ந்தார்.
வளைகுடாவில் அவர்கள், அனைத்து வெளிநாட்டவர்களிடையே மிகவும் விரும்பத்தக்க தொழில் வல்லுநர்களும், நம்பகமான தொழிலாள சக்தியுமாக இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய அரசாங்கமானது அவர்களது "2035ஆம் ஆண்டிற்கான ஒரு இந்திய பொருளாதார வியூகத்தில்" ஆஸ்திரேலிய இந்திய புலம்பெயர்ந்தோரை ஒரு தேசிய பொருளாதார சொத்து என்றும் அவர்களை அதுபோன்று தொழில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கூறுகிறது.
மேலும் "வேகமாக வளர்ந்து வரும் அவர்களின் தொழில் முனைவோர் மனப்பான்மையைப் பயன்படுத்துவதும்" குறிப்பாக, புதுமைகளை உருவாக்க, இந்திய சந்தையைப் பற்றிய அவர்களது அறிவுத்திறனும் ஆஸ்திரேலிய வணிகத் துறையின் எதிர்கால உற்பத்தித் திறனை மேம்படுத்தும் என்றும் கூறுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அவர்களுடைய வளர்ந்து வரும் பொருளாதாரம், அரசியல் முக்கியத்துவமானது. அவர்களை வரவேற்கும் நாடுகளில், அவர்களுக்கு செல்வாக்கு செலுத்தும் குரலை வழங்கியுள்ளது.
இன்று, அவர்கள் தங்களது சொந்த நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த எம்.என்.சிகளுக்குத் தலைமை தாங்குகிறார்கள். அடிக்கடி தொழில் நுட்பத்தையும், முதலீடுகளையும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் ஒரு கருவியாகயுள்ளனர்.
மற்றொருபுறம், வளைகுடா நாடுகளில் உழைக்கும் தொழிலாளர்களைச் சுரண்டப்படுவது, அவர்களைப் பிழிந்தெடுப்பது போன்ற இழிவான கதையும் உள்ளது. பெரும்பாலாக விதிகள், உரிமைகள் பற்றிய அறியாமையின்மையும். நேர்மையற்ற மனிதவள முகவர்களும், இரக்கமற்ற முதலாளிகளுமே அதற்குக் காரணம்.
கனவுகண்டு கொண்டிருக்கும் இளைஞர்களில் பலர் வேலை தேடி மேற்கத்திய நாடுகளுக்குக் சென்று அங்கே அவர்கள் சட்டவிரோதமான குடியேறிகளாக அடியெடுத்து வைக்கும்போது, அவர்களுடைய கனவுகள் முறிந்து கொடுங்கனவு தாக்க ஆரம்பிக்கிறது.
வளைகுடா நாடுகளில் இ-காமாஸ் என்றழைக்கப்படும் வேலை அனுமதிகளானது பெரும்பாலும் ஒற்றைச்சார் ஒப்பந்தங்களாகவும், கட்டுப்படுத்தக்கூடிய வெளியேற்றக்கூடிய உட்பிரிவுகள் அடங்கியதாகும்.
அவர்களின் கடவுச்சீட்டுகள் இந்திய அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறும் விதத்தில், அவர்களுடைய முதலாளிகள் (Kafeels) வசம் வைத்துக்கொள்ளகிறார்கள்.
ஆனால், பிரச்சினை எழும் பட்சத்தில் உங்கள் அடையாளத்தை நிரூபிக்க உங்கள் ஆதார் அட்டையையும், ஓட்டுனர் உரிமத்தினையும் வைத்திருக்கவும், இடைத்தரகர்களும், ஏஜெண்டுகளும் அடிக்கடி அனுமதிக்கமாட்டார்கள்.
தனி நபர்கள், மாநில அரசு வள மையங்களின் வழிகாட்டுதலை நாடுவதோடு, அனைத்துப் பயண மற்றும் ஒப்பந்த ஆவணங்களின் நகல்களை வீட்டிலும் வைத்திருப்பது அவசியமாகும். மேலும், இந்தியாவில் உள்ள சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமிருந்து சரியான தகவலைப் பெற்றுக் கொள்வதும், அரபு மொழியில் சில சொற்களையும், வாக்கியங்களையும் கற்றுக் கொள்வதும் அவசியமாகும்.
வேலையினிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களைப் பாதுகாப்பதற்காக, வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் குடியியில் பாதுகாப்பு ஜெனரலால் எல்லாவித சோதனைகளுக்குப் பின் அவர்களது கடவுச்சீட்டானது "குடியகல்வு அனுமதி தேவை" என்ற முத்திரையுடன் அங்கீகரிக்கப்படுகிறது.
குடிவரவு- குடியகல்வுப் பணியகத்துடன் இணைந்து இயங்குகின்ற "இ-இடம்பெயர்வு" முறையின் மூலம் சக்திவாய்ந்த தகவல் முறைமை பராமரிக்கப்படுகிறது. இந்த தகவல் முறையானது, வெளிநாட்டு தொழில் வழங்குனர்களையும் பதிவு செய்து அவர்களைப் பொறுப்புணர்வு உள்ளவர்களாக்குகிறது.
இந்தியத் தூதரகங்கள் இக்கட்டில் உள்ள இந்தியர்களுக்கு உதவவும், அவர்களுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்கவும், உடனடி நிவாரணம் வழங்கவும் இந்திய சமுதாய நல நிதியைப் பராமரித்து வருவதோடு மட்டுமன்றி, சம்பந்தப்பட்ட வேலையளிப்போர் மற்றும் உள்ளூர் அரசாங்க நிறுவனங்களிடம் அவர்களுடைய நிலையை எடுத்துரைக்கிறது.
வீட்டு வேலைகள், செவிலியர்கள் மற்றும் இதர வேலைகளில் பணிபுரியும் இந்தியப் பெண்கள் மோசமாக நடத்தப்படும் சம்பவங்கள்யிருந்து வருகின்றன. அப்படிப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவர்களைத் தங்கவைக்கக் காப்பிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் வேலை தேடுபவர்கள் திடீரென்று திருப்பி அனுப்பப்பட்டாலோ அல்லது அவர்களது பணி ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்தாலோ அவர்களுக்கு உதவியளிக்கும் வகையில் அவர்கள் காப்பீடு எடுத்து வைத்திருக்க வேண்டும்.
குறைந்தபட்சமாக 30 வயதுள்ள பெண்கள் அல்லது தொழில் வழங்குநரின் உத்திரவாதம் மற்றும் குறைந்தபட்ச உத்திரவாத ஊதியம் போன்ற மகளிர் நலனுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புறப்படுவதற்கு முன்னர், PPP படிவத்தின் கீழ் முறையான நோக்கு நிலை மற்றும் திறன் மேம்பாடு வழங்கப்படுகிறது. ஆனால், எல்லா முன்னெச்சரிக்கைகளும் இருந்தாலும், சில நிகழ்வுகளும், எதிர்பாரா சூழ்நிலைகளும் எழும்புகின்றன. அதனை சமாளிக்க, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்யவும் இந்திய அரசாங்கமானது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
அதன்படி, அவ்வப்போது தூதரகம் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஆலோசனைகள் வழங்குகிறது. அவர்கள் அடிக்கடி "திறந்த வீடு" வைத்து எந்த ஒரு நபரும் அதனை அணுகி ஒரு பிரச்சனையை எழுப்பி அதற்கு விரைவான தீர்வினைப் பெற்றுக் கொள்ள வழி செய்வதுமட்டுமன்றி அவர்களுக்கு 24X7 அவசரத் தொடர்புகளும் உள்ளன.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மறைந்த சுஷ்மா ஸ்வராஜ், இந்திய தூதரகங்களை "வீட்டிற்கு வெளியேயுள்ள தாயகம்" என்று பெரிய அளவில் புலம்பெயர்ந்து இந்தியர்களை அழைத்ததோடு மட்டுமன்றி, அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சனைகளைத் தானே தனிப்பட்ட முறையில் தலையிட்டுக் கவனிப்பதைத் தனது பணியாகக் கொண்டார்.
தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் அதை அதிக வீரியத்துடன் எடுத்துச்செல்கிறார். பிரதமர் மோடி வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் நலன் குறித்து சிறப்பு கவனம் செலுத்துகிறார். மேலும், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நிகழ்வுகளில் அவர்களை சந்தித்து உரையாற்றுவதையும் உறுதிசெய்கிறார்.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கவும், உணர்ச்சி ரீதியான தொடர்பினை உருவாக்கி வளர்ப்பதற்கும் ஒரு பிரவாசி பாரதிய திவாஸ் (பிபிடி) உதவுகிறது. அதில் முக்கிய என்.ஆர்.ஐ, பி.ஐ.ஓக்கள் விரும்பத்தக்க பிபிடி விருதினால் கெளரவிக்கப்படுகிறார்கள்.
பல மாநில அரசுகள், சொந்தமாகவே நலன்புரியும் முகவர்களை அமைத்து என்.ஆர்.ஐ. சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை நடத்தி, புலம்பெயர்ந்தோரை நெருக்கமாக இணையச் செய்கின்றன. ஏதேனும் பிரச்சனை ஏற்படுமேயானால், இந்திய தூதரகம் அதனைச் சரிகிறது. அவர்களது உதவியை நாடத் தயங்க வேண்டாம்.
தனது சொந்த குடிமக்களுக்கு மட்டுமல்லாது, பல்வேறு அண்டை, பிற நாடுகளுக்கும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் இந்தியா முதலில் பதிலளிக்கும் நிலைக்கு உருவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ், எமன், லிபியா, லெபனோன், சிரியா, ஈராக் போன்ற நாடுகளிலுள்ள சண்டைப் பகுதிகள் காரணமாக அங்கிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் இந்த அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளனர்.
வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் இந்தியர்கள், குறிப்பிட்ட நாட்டிற்கு அரசாங்கத்தின் பயணத்தடை ஏதும் இல்லாதபடி உறுதிசெய்து கொள்ள வேண்டும். கடினமான நிலைக்குள் விழுவதைத் தவிர்க்க அவ்வப்போது இந்திய தூதரகம் அளிக்கும் ஆலோசனைக்கும் இணங்க வேண்டும்.
இதையும் படிங்க: ஜப்பான் கப்பலிலிருந்து திரும்பிய 161 பேருக்கு கொரோனா இல்லை