சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்விதமாக சுப்பிரமணியன் சுவாமி சுமத்திய ஊழல் புகாரைத் தொடர்ந்து, இந்தியா புல்ஸ் வீட்டுக்கடன் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது.
மேலும் தங்கள் நிறுவனத்தைக் குறிவைத்து, நற்பெயரைக் கெடுக்கும் விதத்தில் அவர் சில தகவல்களைப் பரப்பியதாகவும், ஆகஸ்ட் 31ஆம் தேதி ஒரு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியின் மூலம் இத்தவறானத் தகவல்கள் பரப்ப்ப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டிய அந்நிறுவனம், இத்தவறான தகவல்களால் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 13ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுப்பிரமணியன் சுவாமி சமூக வலைத்தளங்கள், இணையதளங்களின் மூலம் இந்தியா புல்ஸ் வீட்டுக்கடன் நிறுவனம் பற்றிக் கருத்துக் கூறத் தற்காலிகமாகத் தடை விதித்ததோடு, ஏற்கனவே வலைதளங்களில் அவரால் பதியப்பட்ட தவறான தகவல்களை நீக்கக் கோரியும் உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி மீது இந்தியா புல்ஸ் நிறுவனம் தான் தொடுத்த அவதூறு வழக்கை வாபஸ் வாங்கியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: