இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் ருத்ர தாண்டம் ஆடிவரும் நிலையில், நாட்டில் புற்றுநோய் பாதிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 14 லட்சத்தை நெருங்கும் என ஐசிஎம்ஆர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஐசிஎம்ஆர் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், "இந்தியாவில் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் புற்றுநோய் பாதிப்பு 13 லட்சத்து 90 ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே போல், 2025இல் புற்றுநோய் பாதிப்பு 15 லட்சத்து 70 ஆயிரமாக அதிகரிக்கக் கூடும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே கரோனா தொற்றால் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், இந்தத் தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.