ETV Bharat / bharat

நாள் ஒன்றுக்கு 1.1 லட்சம் கோவிட்-19 சோதனைகள்: ஐசிஎம்ஆர்...! - ஐசிஎம்ஆர்

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 1.1 லட்சம் கோவிட்-19 மாதிரிகள் 612 லேப்கள் மூலம் சோதனை செய்யப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

india-testing-1-dot-1-lakh-covid-19-samples-in-a-day-icmr-chief

author img

By

Published : May 27, 2020, 5:02 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகின்றன. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.50 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், 4 ஆயிரத்து 346 பேர் உயிரிழந்தனர். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பரிசோதனைகள் அதிகரிப்பதே தற்போதைய வழியாக இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 1.1 லட்சம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ''கரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய ஜனவரி மாதத்தில் புனேவில் உள்ள ஒரு பரிசோதனை மையம் தான் இருந்தன. பிப்ரவரி மாதத்தில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்தன. தற்போது 612 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 182 மையங்கள் தனியாருக்கு சொந்தமானது. இந்த பரிசோதனை மையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1.1 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள முடிகிறது.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இறப்பு விழுக்காடு இந்தியாவில் குறைவாகவே உள்ளது. நாம் அனைவரும் மோசமான சுகாதார சுற்றுச்சூழலில் தான் வாழ்கிறோம். ஆனால் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

அதேபோல் இந்தியாவில் தான் அதிகளவிலான மக்கள் கரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளார்கள். இந்திய மக்கள்தொகையைப் பார்க்கும்போது 1.5 லட்சம் பேருக்கு மட்டும் கரோனா பாதிப்பு இருப்பது மிகவும் குறைவானது.

பெரும்பாலான மாநிலங்கள் காசநோய் ஒழிப்பு திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு ட்ரூநெட் இயந்திரங்களால் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எப்படி உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளது'' என்றார்.

இதையும் படிங்க: விவசாய நிலங்களில் ஈக்கள் போல் மொய்த்த 'பாலைவன வெட்டுக்கிளிகள்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.