ETV Bharat / bharat

பொய்யுரைகளைப் பரப்புவது பாகிஸ்தானுக்குப் புதிதல்ல - இந்தியா சரமாரி குற்றச்சாட்டு

டெல்லி: பல்வேறு ஆவணங்களை ஒருங்கிணைத்து பொய்யான தகவல்களை வெளியிடுவது பாகிஸ்தானுக்குப் புதிதல்ல என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி விமர்சனம் செய்துள்ளார்.

திருமூர்த்தி
திருமூர்த்தி
author img

By

Published : Nov 25, 2020, 6:44 PM IST

Updated : Nov 25, 2020, 7:13 PM IST

கடந்த நவம்பர் 19ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் நக்ரோடா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற என்கவுன்டர் சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இது குறித்த முக்கிய ஆவணங்களை ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் உறுப்பினர்களிடம் இந்தியா நேற்று வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவை குற்றஞ்சாட்டும் வகையிலான ஆவணங்களை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸிடம் பாகிஸ்தான் வழங்கியுள்ளது. இதனை விமர்சித்துள்ள ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, பொய்யுரைகளைப் பரப்புவது பாகிஸ்தானுக்குப் புதிதல்ல எனத் தெரிவித்துள்ளார்.

  • The “dossier of lies” presented by Pakistan enjoys zero credibility.

    Concocting documents and peddling false narratives is not new to Pakistan, host to worlds largest number of UN proscribed terrorists and entities.

    Remember Abbottabad!@MEAIndia @DrSJaishankar @PMOIndia

    — PR UN Tirumurti (@ambtstirumurti) November 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தான் வழங்கிய ஆவணங்கள் நம்பத்தகுந்தது அல்ல. பல்வேறு ஆவணங்களை ஒருங்கிணைத்து பொய்யான தகவல்களை வெளியிடுவது பாகிஸ்தானுக்குப் புதிதல்ல. ஐநாவால் அறிவிக்கப்பட்ட பல்வேறு பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் தாயகமாக உள்ளது. அபோட்டாபாத்தை நினைவில் கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு, மே 2ஆம் தேதி அல்கொய்தா அமைப்பின் நிறுவனரான பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத்தில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார். ஆனால், அவர் பாகிஸ்தானில் பதுங்கி இருந்ததை அந்நாடு பல ஆண்டுகளாக மறுத்துவந்தது.

Last Updated : Nov 25, 2020, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.