ETV Bharat / bharat

எல்லைப் பிரச்னை: சீனாவின் பரிந்துரையை நிராகரித்த இந்தியா!

டெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில், சீனா முன்வைத்த பரிந்துரையை இந்தியா நிராகரித்துள்ளது.

சீனா இந்தியா எல்லைப் பிரச்னை  கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை  border dispute  india china border
எல்லைப்பிரச்னை: சீனாவின் பரிந்துரையை நிராகரித்த இந்தியா
author img

By

Published : Aug 23, 2020, 6:28 PM IST

இந்தியா மற்றும் சீனா இடையே நிலவிவரும் எல்லைப் பிரச்னையை தீர்ப்பதற்காக இரு நாடுகளும் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவரும் சூழலில், சரிசமமான தொலைவில் இருநாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற சீனாவின் பரிந்துரையை இந்தியா நிராகரித்துள்ளது.

வெளியுறவு அலுவலர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து, ராணுவ அலுவலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த இருநாட்டு அரசுகளும் முயற்சி செய்துவருகிறது. இருநாடுகளும் சமதொலைவில் படைகளை விலக்கிக்கொள்ளவேண்டும் என்பதை நிராகரித்துள்ள இந்தியா, சீனப்படைகள் இதற்கு முன்பு இருந்த இடத்திற்கு திரும்பச் செல்லவேண்டும் என்றும் கூறியுள்ளது.

1993-96 வரையிலான காலகட்டத்தில் இருநாட்டு அரசுகளும் போட்டுக்கொண்ட ஒப்பந்தங்களை மீறி உண்மையான கட்டுப்பாட்டு பகுதியில் சீனா கட்டுமானப் பணிகள் மேற்கொண்டது குறித்து இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி என்பதில் இருநாடுகளுக்கும் மாறுபட்ட கருத்துகள் இருப்பதால் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிழக்கு லடாக்கில் பாதுகாப்பு சூழல் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.