டெல்லி: அணுசக்தி நிறுவல்கள் மற்றும் தாக்குதலை தடை செய்வதற்கான ஒப்பந்தம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1988ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கையெழுத்திடப்பட்டு 1991ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி நாட்டிலுள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த விவரங்களை இருநாடுகளும் பரிமாறிக்கொள்வது என்றும் ஒருவரது நாட்டிலுள்ள அணுசக்தி நிலையங்கள் மீது மற்றொருவர் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, 30ஆண்டுகளாக தொடர்ந்துவரும் நடைமுறையின்படி இந்தாண்டும் இருநாடுகளுக்கு அணுசக்தி நிலையங்கள் குறித்த விவரங்களை நேற்று பரிமாற்றிக்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாதத்திற்கு அடுத்தபடியாக ஜம்மு காஷ்மீருக்குச் சவால்விடும் விவகாரம் இதுதான் - டிஜிபி