ETV Bharat / bharat

சீனா அத்துமீறுவதை நிறுத்துமாறு இந்தியா எச்சரிக்க வேண்டும் - நிபுணர்கள் கருத்து

கல்வானில் இந்தியாவும் சீனாவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது தொடர்பான பதட்டங்களுக்கு மத்தியில், புதுடெல்லி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், வரம்புகளை மீற வேண்டாம் என பெய்ஜிங்கை வெளிப்படையாக எச்சரிக்க வேண்டும் என்றும் ஈடிவி பாரத்தின் மூத்த நிருபர் சந்திரகலா சவுத்ரியிடம் வல்லுநர்கள் கூறினர்.

China
China
author img

By

Published : Jun 28, 2020, 1:07 AM IST

கல்வான் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் பதற்றங்களைத் தணிக்க இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பல சுற்று ராணுவ மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன.

இந்த மாத தொடக்கத்தில், எல்லைப் பகுதியில் படை குறைப்பு மற்றும் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒரு செயல்முறைக்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாகவும், தற்போதைய நிலையை மாற்ற எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

இருப்பினும், சீனா இந்த ஒப்பந்தத்தை மதிக்காமல் எல்லைப் பகுதி முழுவதும் கட்டமைப்புகளை அமைக்க முயன்றது. அந்த முயற்சி முறியடிக்கப்பட்டபோது, ​​அது மோதல்களைத் தூண்டியது.

இந்தப் பகுதியில் சீனத் தரப்பிலிருந்து வேகமான முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. நிலைமை சவாலானதாக இருக்கப் போவதால் இந்தியா எச்சரிக்கையாக இருப்பது முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 'நடந்தவரை போதும் இனியும் நடக்க வேண்டாம்' என்று சீனாவுக்கு இந்தியா ஒரு தெளிவான செய்தியை வழங்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

"சீனர்கள் தாங்கள் நிறுத்தப் போவதில்லை என்பதற்கான சமிக்ஞையை இந்தியாவிற்கு கொடுக்க முயற்சிக்கின்றனர். இதுபோன்ற சமிக்ஞைகளை வழங்குவதன் மூலம், அவர்கள் தங்கள் ஆயுதப்படைகளுக்கும், தங்கள் சொந்த உள்நாட்டு பார்வையாளர்களுக்கும் சமிக்ஞைகளை அனுப்புகிறார்கள்.இந்த செய்தியை இந்தியாவின் அனைத்து அண்டை நாடுகளுக்கும் அனுப்பப் போகிறது. இதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன" என்று முன்னாள் தூதர் ஜே.கே. திரிபாதி ஈடிவி பாரத்திடம் தெரிவித்தார்.

மேலும் அவர், "எந்தவொரு நாடுகளும் ஒரு முழுமையான போரை தாங்க முடியாது என்பதால், எந்த யுத்தமும் இருக்காது என்று நான் உறுதியளிக்கிறேன். படைகளை விலக்கிக் கொள்வதற்கு நிச்சயம் சிறிது காலம் எடுக்கும், விரைவில் நடந்தால் நல்லது. சீனர்களால் ஒரு பெரிய சூழ்ச்சியை செய்ய முடியும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணரவில்லை. சீனா இந்தியாவை அச்சுறுத்துகிறது, அவை வரம்புகளை மீறினாலும், அது இருதரப்பு போராக மட்டும் இருக்காது, ஆனால் ஒரு பிராந்திய யுத்தமாக முடிவடையும்"என்று கூறினார்.

"இந்தியா தனது அழுத்தத்தைத் தணிக்கக் கூடாது, அதே உத்வேகத்தில் இருக்க வேண்டும். சீனாவுக்கு இந்தியா 'நடந்தவரை போதும் இனியும் நடக்க வேண்டாம்' என்ற ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், திட்டமிடல் விவகார நிபுணர் சுஷாந்த் சரீன் கூறுகையில், "நான் சீனாவின் நோக்கம் குறித்து மிகுந்த சந்தேகம் கொண்டுள்ளேன், அவர்களை கண்ணியமானவர்கள் என்று நான் கருத மாட்டேன். இது ஒட்டுமொத்தமாக ஒரு ஆபத்தான சூழ்நிலை. எந்த ஆதாரத்தையும் காணும் வரை, சொல்வது மிகவும் கடினம். இந்த சமயத்தில் நடந்த சம்பவத்தால் இராணுவம், திட்டமிடல் மற்றும் பொருளாதாரத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். "

"கூட்டு வணிக முயற்சிகள் இனி அனுமதிக்கப்படாது என்பதால், நாடுகளின் வர்த்தக உறவுகள் குறித்து நிறைய மாற்றங்கள் நிகழக்கூடும். இரண்டாவதாக, எல்லைப் பகுதியில் உள்ள பெரும்பாலான பகுதிகள் இராணுவமயமாக்கப்படவில்லை, பாக்கிஸ்தானிய ஊடுருவலுக்குப் பிறகு கார்கில் பகுதிகளில் என்ன நடந்ததோ அவ்வாறே மாற்றப்பட்ட வேண்டும் என்று நான் நினைக்கிறேன. இது ஒரு தீவிரமான நிலைமை "என்று சரீன் சுட்டிக்காட்டினார். கடந்த சில நாட்களாக, கால்வான் பள்ளத்தாக்கு மீது சீனா உரிமை கோருகிறது, ஆனால் இந்தியா அதை "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறுகிறது.

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள பல முக்கிய இடங்களில் துருப்புக்கள் மற்றும் ஆயுதங்களின் எண்ணிக்கையை சீனா அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பதற்றம் மேலும் அதிகரித்தால், இந்தியா தரைவழி போர்களில் ஈடுபடக்கூடாது என்று ஜே.கே. திரிபாதி மேலும் கோடிட்டுக் காட்டினார். "ஒரு நேர்மறையான விஷயம் என்னவென்றால், ஸ்வீடன் மற்றும் அமெரிக்காவில் உள்ள பல பாதுகாப்பு சிந்தனை நிறுவனங்கள், “உயரமான இடங்களில் போர் என்று வரும்போது, ​​இந்தியாவுக்கு நிகர் இல்லை” என்று ஒருமனதாக கூறியுள்ளன. இந்தியாவின் தரைப்படை எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவை மலைப்பாங்கான பகுதிகளில் போர் புரிய சிறந்த பயிற்சி பெற்றவை ," என்று அவர் கூறினார்.

எல்லைப் பகுதியில் சீனத் தரப்பு ஒரு பெரிய துருப்புக்கள் மற்றும் ஆயுதங்களை சேகரித்து வருவதாக வெளிவிவகார அமைச்சகம் தெளிவாக சுட்டிக்காட்டியது, இது எல்லைப் பகுதியில் அமைதி மற்றும் அமைதியை பராமரிப்பது தொடர்பான பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்களின் விதிகளுக்கு முரணானது.

சீன மீறல்களுக்கு எதிரான இந்தியாவின் திட்டமிடுதலை வலியுறுத்திய திரிபாதி, எல்லைகளில் எந்தவொரு நிகழ்வையும் சந்திக்க இராணுவம் குறை கூற முடியாத அளவு தயாராக வேண்டும் என்று பரிந்துரைத்தார். இரண்டாவதாக, பாதுகாப்பு கவுன்சில், பிற பிராந்திய குழுக்கள் உள்ளிட்ட சர்வதேச சமூகம் மூலம் இந்தியா சீனா மீது அழுத்தம் கொடுக்க வேண்டும், மூன்றாவதாக, இந்தியாவும் சீனாவுடனான வர்த்தகத்தை குறைக்க வேண்டும், என்று திரிபாதி கூறினார்.

தற்போதைய நிலையை கட்டாயப்படுத்தி மாற்ற முயற்சிப்பது என்பது எல்லைப் பகுதிகளில் நிலவி வரும் அமைதிக்கு சேதம் விளைவிப்பதோடு மட்டுமில்லாமல், பரந்த இருதரப்பு உறவிலும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று வெள்ளிக்கிழமையன்று இந்தியா சீனாவை எச்சரித்தது.

இதையும் படிங்க: கர்தார்பூர் வழித்தடத்தைத் திறக்கத் தயார் - பாகிஸ்தான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.