ETV Bharat / bharat

தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் 63ஆவது இடத்தில் இந்தியா - தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியல்

டெல்லி: தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

india jumps 14 notches, ranked 63rd in Ease of Doing Business
author img

By

Published : Oct 24, 2019, 11:11 PM IST

கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் நமது நாடு 77ஆவது இடத்தில் இருந்தது. இப்போது 14 இடங்கள் முன்னேறியுள்ளது. உலக வங்கி சார்பில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நாடுகள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுவருகிறது.

அந்த நாடுகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், வரி விதிப்பு முறை, தொழில் தொடங்குவது, அந்நிய முதலீடுகள் தொடர்பான அரசின் முக்கிய கொள்கைகள், திவால் தொடர்பான சட்டங்கள், ஒப்பந்தங்களை அமல்படுத்துவது, கட்டுமான அனுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் நாடுகள் பட்டியலிடப்படுகின்றன.

இதன்படி புதிய பட்டியலை உலக வங்கி இன்று வெளியிட்டது. கடந்த ஆண்டு 77ஆவது இடத்திலிருந்த இந்தியா, இந்த ஆண்டில் 14 இடங்கள் முன்னேறி, 63ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

2014ஆம் ஆண்டு பாஜக அரசு பதவியேற்கும்போது, இந்தப்பட்டியலில் இந்தியா 142ஆவது இடத்தில் இருந்தது. அதன் பிறகு 131ஆவது இடம், 100ஆவது இடம், 73ஆவது இடம் என படிப்படியாக முன்னேறி, தற்போது 63 ஆவது இடத்துக்கு வந்துள்ளது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை உலக வங்கி வெகுவாகப் பாராட்டியுள்ளது. இத்திட்டம் மூலம் முதலீடுகளை வெகுவாக ஈர்க்கப்பட்டுவருகிறது என்றும் உலக வங்கி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பருப்பு, கோதுமை ஆதார விலை உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.