ETV Bharat / bharat

வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்கை நிலைநாட்ட இந்தியா போராடிவருகிறது - ஜெய்சங்கர்

இந்திய - பாகிஸ்தான் பிரிவினை, தாமதப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் காரணமாக வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்கை நிலைநாட்ட இந்தியா போராடிவருகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 21, 2020, 10:57 PM IST

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் ஐஎப்எஸ் அலுவலருமான ஜெய்சங்கர் எழுதிய 'தி இந்தியா வே: ஸ்ட்ராடெஜிஸ் ஃபார் ஆன் அன்செர்டைன் வேர்ல்ட்' என்ற புத்தகம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதில், இந்திய - பாகிஸ்தான் பிரிவினை, தாமதப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள், அணு ஆயுத தயாரிப்பில் ஏற்பட்ட சுணக்கம் ஆகியவற்றின் காரணமாக எளிதாக கிடைத்திருக்க வேண்டிய செல்வாக்கை நிலைநாட்ட இந்தியா போராடிவருகிறது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அந்த புத்தகத்தில், "2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடி காலத்திலிருந்து தற்போதை கரோனா காலம் வரை உலகம் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. நாடு அப்போது பல சவால்களை சந்தித்தது. அதனை எதிர்கொள்வதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்தியாவின் தரம் உயர்ந்துள்ளது. நாட்டிற்கான நலன்களை அடைவதில் தெளிவு இருந்தாலும், அதனை ஒழுங்காக வெளிப்படுத்த வேண்டும்.

மூன்று குளறுபடிகளால் இந்தியா சிக்கித் தவித்தது. 1947ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய, பாகிஸ்தான் பிரிவினை. நாட்டை அரசியல் ரீதியாகவும் நிலப்பரப்பு ரீதியாகவும் பிரித்தது. இதன்மூலம், ஆசிய கண்டத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்தது.

சீனா அமல்படுத்தி 15 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தம் இந்தியாவை பின்னுக்கு தள்ளியது. அணு ஆயுத தயாரிப்பில் ஏற்பட்ட சுணக்கம். இம்மூன்றின் விளைவாக எளிதாக கிடைத்திருக்க வேண்டிய செல்வாக்கை நிலைநாட்ட இந்தியா போராடிவருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'மேற்கு வங்கத்தில் மண்ணின் மைந்தர்கள் ஆட்சி': பாஜகவை விளாசிய மம்தா பானர்ஜி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.