இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இருப்பினும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நாட்டில் கரோனா பரவலைப் புரிந்துகொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைளும் ஆய்வுகளும் நடத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் மே 11ஆம் தேதிமுதல் ஜூன் 4ஆம் தேதி வரை நடத்தப்பட்ட serosurveyஇன் முடிவுகள் தற்போது இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மே மாதத்தில் இந்திய மக்கள்தொகையில் சுமார் 0.73 விழுக்காட்டினர், அதாவது 64 லட்சத்து 68 ஆயிரத்து 388 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான நபர்கள் மட்டுமே மே மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது.
வயது வாரியாகப் பார்த்தால், மே மாதம் 18-45 வயதுடையவர்கள் அதிகபட்சமாக 43.3 விழுக்காடு வரை கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அதைத்தொடர்ந்து 46-60 வயதுடையவர்கள் 39.5 விழுக்காடும் 60 வயதைக் கடந்தவர்கள் 17.2 விழுக்காடும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது.
ஐஎம்சிஆரின் முடிவுகள் இவ்வாறு இருந்தாலும், தற்போதுவரை இந்தியாவில் தற்போதுவரை 45 லட்சம் பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா தடுப்பு மருந்து சோதனை நிறுத்தும்: உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?