சவூதி அரேபியா அரசுக்குச் சொந்தமான இரண்டு முக்கிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த எண்ணெய் ஆலைகளில் தீ கொளுந்துவிட்டு எரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெரும் இழப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. "ஒரு போதும் இந்தியா பயங்கரவாதத்துக்கு துணை போகாது. மேலும் பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம்" என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும் அமெரிக்க - சீனா இடையே வர்த்தகப் போர் நிலவி வரும் நிலையில், உலக பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. தற்போது கச்சா எண்ணெய் நிறுவனங்களில் நடத்தப்பட்ட, இந்த தாக்குதலால் பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.