இந்திய - சீனா எல்லையான அருணாசலப் பிரதேசத்தில் உள்ளது சோசோ கிராமம். இந்தக் கிராமத்திற்குள் சீன ராணுவம் ஜூலை முதல் வாரம் அத்துமீறி நுழைந்துள்ளது. இதனால் இரு நாட்டு ராணுவங்களுக்கிடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகத் தெரிகிறது. அரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்புகள் நிகழவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அத்துமீறி நுழைந்த சீனா ராணவத்திடம் இந்திய ராணுவம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் அதற்கு சீனா ராணுவம் பதிலளிக்கவில்லை.
அடுத்த அரை மணி நேரத்தில் சீனா ராணுவம் இந்திய எல்லையிலிருந்து வெளியேறியது. இந்த சோசோ கிராமத்தில் அருவி உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவது வழக்கம். இதேபோல் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாட்டு ராணவங்களுக்கிடையே துப்பாக்கிச்சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது.