பாகிஸ்தான் தேசிய தினம் மார்ச் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தேசிய தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு இந்திய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் தூதரகத்தின் அழைப்பை ஏற்கமத்திய அரசு மறுத்து விட்டது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கும் பாகிஸ்தான் தூதரகம் அழைப்பு விடுத்ததாலேயே மத்திய அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய மூத்த அதிகாரி, "இரு தரப்பினருக்கும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. இந்திய உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தொடர்ந்து தலையிட்டு வருவதால், மத்திய அரசாங்கம் இந்திய பிரதிநிதிகளை அனுப்ப மறுத்து விட்டது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த காலங்களில் பாகிஸ்தான் தூதரகங்களில் நடைபெற்ற தேசிய தின விழாவில் இந்தியா சார்பாக மத்திய அமைச்சர்கள் விகே சிங், கஜேந்திர சிங் ஷேகாவத், முன்னாள் அமைச்சர் எம் ஜே அக்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்என்பது குறிப்பிடத்தக்கது.