ETV Bharat / bharat

கோவிட்-19 விவகாரம்; சுதந்திர விசாரணைக்கு குரல்கொடுக்கும் இந்தியா - உலக சுகாதாரச் சபை இந்தியா

டெல்லி: கரோனா வைரஸ் உருவாக்கம் தொடர்பாக சுதந்திர விசாரணைக்கோரி 62 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் இந்த நகர்வு குறித்து மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

China
China
author img

By

Published : May 18, 2020, 11:06 PM IST

கரோனாவின் மையமான சீனாவின் வூஹானைக் குறிப்பிடாமல், வைரஸ் தொற்று உருவாக்கம் குறித்த சுதந்திர விசாரணைக்கோரி 62 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. உலக சுகாதார சபையின் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தில் விசாரணை என்ற வார்த்தையை குறிப்பிடாமல் சாதுரியமாகத் தவிர்ந்து ஆய்வு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்பேனியா, வங்கதேசம், பெலாரஸ், பூட்டான், பிரேசில், கனடா, இந்தோனேசியா, ஜப்பான், நியூசிலாந்து, நார்வே, தென் கொரியா, ரஷ்யா, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட 62 நாடுகளில் இந்தியாவும் இந்த தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது. இந்த தீர்மானத்தில் வல்லாதிக்கமான அமெரிக்கா பங்கேற்காத நிலையில், தாக்குதலின் மையப்புள்ளியான சீனாவும் ஒதுங்கிக்கொண்டது.

இந்த தீர்மானத்தில் கரோனா பெருந்தொற்றின் மையமான சீனாவை எந்த விதத்திலும் குற்றஞ்சாட்டவில்லை. அதேவேளை, உலக சுகாதார மையத்தின் விலங்கியல் பிரிவு இந்த நோய் தொற்றின் மூலம், மனிதர்களுக்குள் இந்த வைரஸ் எப்படி நுழைந்தது என்பதை கண்டறிய முழு முயற்சியில் களமிறங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மரீஸ் பயின் தனது அறிக்கையில், கரோனா குறித்த உன்மையை உலக நாடுகள் அறியவும் சுதந்திர விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இது உலக நாடுகளை சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய ஏதுவாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்த பெருந்தொற்றில் நாம் பெறும் பாடம் எதிர்காலத்தில் நம் குடிமக்களை பாதுகாக்கும் என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கரோனா பாதிப்பின் பொறுப்பை சீனா ஏற்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றன. ஆனால் சீனாவோ இம்முடிவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துவரும் நிலையில், இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் வர்த்தக ரீதியான அழுத்தங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, இந்த விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை, திறந்த விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எங்களது லட்சியம் என ஆஸ்திரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார். எனவே, எந்தவொரு முன்முடிவுடன் குறை கூற வேண்டாம் என இந்தியாவுக்கான சீனத் தூதுவர் சன் வெய்டோங் தெரிவித்தார்.

இந்நிலையில் சீனாவைச் சீண்டும் விதமாக தைவான் விவகாரத்தில் ஆஸ்திரேலியா குடைச்சல் கொடுத்திருப்பது இருநாட்டு உறவில் உரசலை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகையச் சூழலில் இம்மாத இறுதியில் உலக சுகாராத சபையின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கோவிட்-19 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்களை உருவாக்க ஃபிட்பிட் திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.