ETV Bharat / bharat

ராஜஸ்தான் ஆளும் கட்சியினருக்கு அடுத்த தலைவலியாக மாறியிருக்கும் வருமான வரி சோதனை! - வருமான வரித்துறை சோதனை

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்திவருகின்றது.

ராஜஸ்தான் ஆளும் கட்சியினருக்கு அடுத்த தலைவலியாக மாறியிருக்கும் வருமான வரி சோதனை!

author img

By

Published : Jul 17, 2020, 12:03 AM IST

கர்நாடக, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியிலும், கட்சியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையேயான மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில ஆளும் கட்சியான காங்கிரஸுக்கு அடுத்த நெருக்கடியாக அக்கட்சிக்கு நெருக்கமான தொழிலதிபர்களிடம் வருமான வரித்துறையினர் இன்று(ஜூலை 16) காலை முதல் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.

காங்கிரஸ் தலைவர்களான ராஜீவ் அரோரா, தர்மேந்திர ரத்தோர் உள்ளிட்டவர்களிடமும், அவர்களுக்கு நெருக்கமான பிற வர்த்தகர்களின் இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜெய்ப்பூர், கோட்டா, டெல்லி மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் இந்த சோதனைகளை மூன்று பெரும் குழுக்களாக வருமான வரித் துறையினர் மேற்கொண்டு வருவதாக வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் அவரது மகன் வைபவ் கெலாட் ஆகியோருடன் மிக நெருக்கமாக இருந்த ஆறு தொழிலதிபர்களுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்டவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.

இந்த சோதனைகளில், இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் ரொக்கமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், ரூ.65 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பழங்கால பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

இவற்றுடன் ஏராளமான டிஜிட்டல் தரவுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் தொழில்நுட்பத் துறையினர் தெரிவித்துள்ளனர். சோதனைக் குழுக்கள் நடத்திய ஆய்வில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.