நாடு முழுவதும் கரோனா பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு அத்தியாவசிய சேவைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த சூழலில் நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் பேசுகையில், கரோனா பாதிப்பு காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகள் மட்டுமே இயங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களுக்கு நீதி வழங்கும் மூன்றாவது தூணான நீதித்துறை அத்தியாவசிய துறைகளில் சேராதது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதித்துறை ஒரு தன்னாட்சி அமைப்பு, அதை அரசு கட்டுப்படுத்தக்கூடாது எனத் தெரிவித்த கபில் சிபில், தனது பொறுப்பை உணர்ந்து நீதித்துறை சரியான முடிவை எடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
சி.ஏ.ஏ, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ளதை நீதித்துறை இந்த நேரத்தில் மறந்துவிடக் கூடாது எனவும் சூழலுக்குகேற்ப உரிய முடிவுகளை இந்திய நீதித்துறை எடுக்க வேண்டிய நேரமிது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா: கர்நாடகாவில் பிளாஸ்மா சிகிச்சை தொடக்கம்