ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் (Sikar) உள்ள கரங்கா கிராமத்தில் (karanga) நேற்று இரவு (சனிக்கிழமை) ஃபதேபூர் (Fatehpur) தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டிருந்த மூன்று லாரிகள் திடீரென மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தினால் வாகனங்களில் இருந்த டீசல் வெளியேறி தீ பற்றி கொண்டது. இதில் இரண்டு நபர்கள் சம்பவ இடத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் கருப்புகை சூழ்ந்துகொண்டது, தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து வந்த காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்களை கைப்பற்றி உடற் கூராய்விற்காக மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.