ETV Bharat / bharat

விமான ஜன்னலில் இருந்த கடத்தல் தங்கம் பறிமுதல்! சுங்கத் துறை அதிரடி - விமான ஜன்னல் தங்கம் கடத்தல்

சண்டிகர்: விமானத்தின் ஜன்னலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 95 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பஞ்சாப்பில் விமான ஜன்னலில் கடத்த முயன்ற 95 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
author img

By

Published : May 7, 2019, 10:01 AM IST

Updated : May 7, 2019, 10:50 AM IST

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று துபாயிலிருந்து வந்த விமானம் தரையிறங்கியது. தரையிறக்கப்பட்ட விமானத்தை சுத்தம் செய்தவர்கள், அவ்விமானத்தின் 30-ஏ இருக்கையின் ஜன்னலில் ஏதோ மறைத்து வைக்கப்பட்டிருந்தை பார்த்து தங்களது உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் அங்கு வந்த சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தபோது, இருக்கையின் ஜன்னலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இருக்கையில் பயணம் செய்தவரை அலுவலர்கள் விசாரித்தனர்.

அப்போது, அந்தப் பயணி, தனக்கும் அந்தத் தங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். இதையடுத்து, கடத்தல் தங்கம் குறித்து வழக்குப்பதிந்த சுங்கத் துறை அலுவலர்கள் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ. 95 லட்சம் இருக்கும் எனத் தெரிகிறது.

Intro:Body:

https://timesofindia.indiatimes.com/city/chandigarh/rs-95-lakh-unclaimed-gold-found-on-dubai-flight/articleshow/69209953.cms

Conclusion:
Last Updated : May 7, 2019, 10:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.