ETV Bharat / bharat

புயலிலும் தகவல் பரிமாற்றத்தை துல்லியமாக நடத்தும் ஒளி கதிர்கள் - ஐஐடி சாதனை! - ஐஐடி குவஹாத்தி ஆராய்ச்சியாளர்கள்

ஐஐடி கவுஹாத்தி ஆராய்ச்சியாளர்களின் அடுத்த முயற்சியாக ஒளி கதிர்களை பயன்படுத்தி ஒரு புதிய இலவச-விண்வெளி ஆப்டிகல் தகவல்தொடர்பு முறையை உருவாக்கியுள்ளனர்.

ஐஐடி
ஐஐடி
author img

By

Published : Nov 24, 2020, 11:05 AM IST

கடந்த இரண்டு தசாப்தங்களாக தகவல் தொடர்புகளில் தனித்துவமான முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. தற்போது, பரவலாக ஆப்டிகல் பைபர் மூலமாக தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால், இயற்கை பேரிடர்கள் சமயத்தில் இந்த வழியில் சில சிக்கல்கள் உள்ளது. எனவே, இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஐஐடி கவுஹாத்தி ஆராய்ச்சியாளர்கள், ஒளி கதிர்களை பயன்படுத்தி ஒரு புதிய இலவச-விண்வெளி ஆப்டிகல் தகவல் தொடர்பு முறையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பம் குரல், மெசேஜ் அல்லது படங்களை ஒளி கதிர்கள் மூலமாக ஆப்டிகல் தகவல் தொடர்பு முறையைவிட வேகமாக அனுப்புகிறது. புயல், மழை போன்ற இயற்கை பேரிடர்கள் சமயத்தில், எந்த விதமான தடையின்றி தகவலை துல்லியமாக அனுப்பும் திறன் கொண்டது. இதற்காக, ஜெர்னிக் முறைகள் எனப்படும் ஆர்த்தோகனல் இடஞ்சார்ந்த ஒளி முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்கு ஐஐடி குவஹாத்தியின் இயற்பியல் துறை பேராசிரியர் பொசாந்தா ரஞ்சன் போருவா மற்றும் அசாமின் அபயபுரி கல்லூரியில் இயற்பியல் துறையில் உதவி பேராசிரியரான சந்தானு கான்வர் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த புதிய தொழில்நுட்பத்தின் சோதனை முறைகள் வெற்றி பெற்று தகவல் பரிமாற்றம் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.