ETV Bharat / bharat

'20 லட்சம் ரூபாய் கொடுத்தால் சீன ஆக்கிரமிப்பை  மோடி அகற்றிவிடுவாரா?' - ப. சிதம்பரம்

டெல்லி: சுனாமி நிவாரண நிதியாக 2005ஆம் ஆண்டு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து, ராஜீவ்காந்தி அறக்கட்டளை சார்பில் பெறப்பட்ட 20 லட்சம் ரூபாயை, அரசிடம் திரும்பக் கொடுத்துவிட்டால், சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை இந்தியா மீட்டெடுக்கும் என்று பிரதமர் மோடி நரேந்திர மோடி உறுதி அளிப்பாரா என்று ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

20 லட்சம் கொடுத்தால், சீனா ஆக்கிரப்பதை  மோடி அகற்றிவிடுவாரா - ப.சிதம்பரம் கேள்வி

author img

By

Published : Jun 27, 2020, 9:03 PM IST

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவத்தினர் 20 பேர் மரணமடைந்தனர். மேலும், 70க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்தும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எல்லைப் பிரச்னை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த விளக்கம் குறித்தும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துவருகிறது.

இதனை எதிர்த்துப் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, 2005ஆம் ஆண்டு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் ராஜீவ்காந்தி அறக்கட்டளை நிதியுதவி பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டினார்

  • Suppose RGF returns the Rs 20 lakh, will PM Modi assure the country that China will vacate its transgression and restore status quo ante?

    — P. Chidambaram (@PChidambaram_IN) June 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். அதில், ”2005ஆம் ஆண்டு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு 20 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டதாகக் கூறி, உண்மையை மறைத்துப் பேசுவதில் நிபுணத்துவம் பெற்ற நட்டா, அந்தப் பணத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிவாரணப் பணிகளுக்காகச் செலவிட்டதை ஏன் கூற மறந்துவிட்டார்.

  • Why is the BJP hiding the fact that the Rs 20 lakhs received by RGF from PM National Relief Fund in 2005 was for tsunami relief work in Andaman & Nicobar? And that every rupee was spent for the purpose and accounted for?

2005 நிவாரணப் பணிக்கும், 2020 சீனா ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு இருக்கிறது சீன ஆக்கிரமிப்பை எப்படி எப்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை.

20 லட்சம் ரூபாயை ராஜீவ்காந்தி அறக்கட்டளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டால். சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை இந்தியா மீட்டெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளிப்பாரா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.