ETV Bharat / bharat

உள்நாட்டு சோதனைக் கருவிகளை ஐசிஎம்ஆர் அனுமதிக்க வேண்டும் - indigenous testing methodologies

திருவனந்தபுரம்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளிக்க வேண்டும் என சசிதரூர் வலியுறுத்தியுள்ளார்.

ICMR should approve indigenous testing methodologies: Shashi Tharoor

author img

By

Published : Apr 25, 2020, 12:12 PM IST

நாட்டில் கரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சீனாவிடமிருந்து வாங்கிய கரோனா வைரஸ் சோதனைக் கருவிகள் துல்லியமான முடிவுகளை அளிக்கவில்லை. மேலும், செக், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட கருவிகள் துல்லிய முடிவுகளைக் காட்டாததால், கருவிகளை திருப்பி அனுப்பியுள்ளன.

மேலும், பல நாடுகள் பரசோதனைக் கருவிகள் வாங்க சீனாவிற்கு அளித்த தொகையினை திரும்ப வழங்குமாறு வழியுறுத்திவருகின்றன. இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மௌனம் காப்பது ஏன் என சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் நிலவும் பெருந்தொற்றினை சமாளிக்க ஐசிஎம்ஆர் மாதத்திற்கோ, நாட்களுக்கோ முடிவுகளை அறிவிப்பது பொருத்தமற்றதாக இருக்கும் எனவும், மணிக்கொரு முறையாவது கரோனா தொற்று குறித்த நடவடிக்கைகள் குறித்து தகவலளிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ சித்ரா திருனல் இன்ஸ்டிடியூட் ஃபார் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (எஸ்.சி.டி.எம்.எஸ்.டி), ஆர்.டி. கருவிகள் என்ற இரு நிறுவனங்களும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் கருவிகளைக் கண்டறிந்து ஐசிஎம்ஆரின் ஒப்புதல் பெறுவதற்காக காத்திருக்கிறது.

  • Coronavirus: India gets 'faulty' testing kits from China https://t.co/lkMdm66hhF Isn't it time we MPs ask -- Did the Govt take away our MPLADS funds to pay for faulty testing kits from China? Who is responsible for wasting public money & putting public health at risk?

    — Shashi Tharoor (@ShashiTharoor) April 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆனால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளுக்கே அரசு முன்னுரிமை அளித்துவருவதாக குற்றஞ்சாட்டிய அவர், இந்தக் கருவிகள் பயன்பாட்டில் நாட்டின் பொருளாதாரமும் அடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா நிவாரணத்திற்காக நிதிகள் திரட்டப்பட்டுவரும் நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு மதிப்பளிக்குமாறும் கரோனா தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா பரிசோதனைக் கருவியை உருவாக்கிய டெல்லி ஐஐடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.