உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், புனே வைரலாஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கோவாக்சின் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
இதனை சோதனை செய்து பார்க்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதலையும் அந்நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று சோதனை முடிவுகளை வெளியிடும் வகையில் மனிதர்களிடத்தில் இந்தத் தடுப்பூசி சோதனைகளை விரைவில் நடத்துமாறும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பாரத் பயோ டெக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதையும் படிங்க: உலகிலேயே மலிவான விலையில் கரோனா தடுப்பூசியை தயாரிப்பதுதான் நோக்கம்!