ETV Bharat / bharat

தாய்மையும் கடமையும் எனதிரு கண்கள்... பிரசவ விடுப்பை தூக்கியெறிந்த ஐஏஎஸ்!

பிரசவ கால விடுப்பை தூக்கியெறிந்துவிட்டு, பிறந்து 22 நாள்களே ஆன கைக்குழந்தையோடு கரோனா தடுப்பு பணிகளைச் செம்மையாக செய்யும் மாநகராட்சி ஆணையரின் கடமைப்பற்று அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

IAS office gives up maternity leave amid COVID-19 crisis, joins work with month-old baby

author img

By

Published : Apr 13, 2020, 2:07 PM IST

கண்ணுக்குத் தெரியாத எதிரியான கரோனாவுடன் இந்தியா கடும் போர் புரிகிறது. சிப்பாய்களாக களத்தில் நின்று அசுர வேகத்தில் சுழன்று மக்களைக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள் சேவகர்கள். மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர்கள் என நீளும் இப்பட்டியலில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தீயாய் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.

இருப்பினும் ஒரு சில அலுவலர்கள் கடமையே கண்ணாக இருந்து அவ்வப்போது செயற்கரிய செயலைச் செய்வார்கள். அவ்வாறு செய்த மக்கள் சேவகரான விசாகப்பட்டினம் பெருமாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மல்லாவின் செயல் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீஜனா 2013ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. தற்போது அவர் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருகிறார். அவரது கணவர் வழக்கறிஞர். இந்தியாவுக்குள் கரோனா கால்தடத்தைப் பதித்ததையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் நிறைமாத கர்ப்பிணியாக அலுவலகப் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீஜனா, பிரசவத்திற்காக ஒருமாத காலம் விடுப்பில் சென்றார்.

இதையடுத்து மூன்று வாரங்களுக்கு முன் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இச்சூழலில் கரோனாவின் தீவிரம் அதிகரிக்கவே, ஊரடங்கை நீட்டிக்கலாம் என்ற பேச்சு எழுந்தவுடன், மீண்டும் அவரை கடமை அழைத்துள்ளது. தன் விருப்பத்தை கணவரிடமும் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். முதலில் ஸ்ரீஜனாவின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு அவரின் முடிவுக்கு தயக்கம் காட்டிய அவர்கள், பின்னர் சம்மதித்துள்ளனர்.

சம்மதித்த மறுகணமே கைக்குழந்தையோடு நேற்று அலுவலக சிம்மாசனத்தில் அமர்ந்து ஆணைகளைப் பிறப்பிக்கத் தொடங்கினார். குழந்தை அழுதால் பால் புகட்டி தாய்ப்பாசத்தையும், கரோனா தடுப்புப் பணிகளுக்கான உத்தரவுகள் பிறப்பித்து மக்கள் பாசத்தையும் ஒருசேர வெளிப்படுத்துகிறார் ஸ்ரீஜனா.

பெருந்தொற்று சூழ்ந்துள்ள இவ்வேளையிலும் அலுவலத்தில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த அவரிடம் பேசியபோது, "இத்தகைய நெருக்கடியான காலத்தில் என் பணியின் முக்கியத்துவத்தையும், அவசரகாலத்தில் எனது சேவை எவ்வளவு தேவை என்பதையும் நான் அறிவேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பலமாக கரோனாவை எதிர்க்க வேண்டிய நேரம் இது என்பதை உணர்ந்ததால் பணிசெய்ய முடிவெடுத்தேன். என்னை யாரும் பணிக்குத் திரும்ப கட்டாயப்படுத்தவில்லை.

என் முடிவை முழுமனதோடு ஏற்றுக்கொண்டதற்கும், நான் வீட்டில் இல்லா நேரம் குழந்தையக் கவனித்துக்கொள்வதற்கும் குடும்பத்தினருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனது குழந்தையுடன் இருப்பதற்குப் பதிலாக கடமையைச் செய்ய பிரசவ கால விடுப்பைக் குறைப்பேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஆயினும், என்னுடைய பணியால் ஒருவருக்குப் பயனுள்ளதாக அமையுமானால் அது பெருமதிப்புக்குரியது என்று எண்ணியதால் கடமையைச் செய்ய வந்தேன்" என்றார்.

எப்போடா பணி முடிந்து வீட்டுக்குச் செல்லலாம் என்று அலுவலக வாசலில் விழிவைத்துக் காத்திருக்கும்அரசு அதிகாரிகள் சிலருக்கு மத்தியில் கடமையின் பால் கொண்ட காதலால் இவர் போன்றவர்கள் எடுக்கும் முடிவுகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்காமல் இல்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.