இந்திய விமானப் படை சமீப காலங்களில் பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறது. இந்திய விமானப் படையின் மற்றொரு சாதனையாக இன்று பயோடீசலில் இயங்கும் ஏ.என். 32 ரக ராணுவ விமானம், உலகில் மிக உயரத்தில் இருக்கும் விமான தளமான காஷ்மீரின் குஷோக் பாகுலா ரிம்போச்சி விமான தளத்திலிருந்து புறப்பட்டது. கடல்மட்டத்திலிருந்து லே பகுதி சுமார் 10,682 அடி உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏ.என். 32 ராணுவ விமானத்தின் இரண்டு இன்ஜின்களும் பயோடீசலில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லே பகுதிக்கு செல்லும் முன் சத்தீஸ்கரிலுள்ள விமான தளத்தில் பயோடீசலில் இயங்கும் இந்த ஏ.என். 32 ராணுவ விமானம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹார்ன் அடித்தால் ரெட் சிக்னல் மாறாது - ஒலி மாசை குறைக்க அட்டகாசமான ஐடியா