இந்திய பாதுகாப்பு படைக்குச் சொந்தமான சுகோய் - 30 விமானம் அசாம் மாநிலம், மிலன்பூரில் விபத்துக்குள்ளானது. விவசாய நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த இரண்டு பைலட்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உயிர் தப்பிய பைலட் ஒருவருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பொது சொத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய பைலட்களை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து விமானப் படை விசாரித்து வருகிறது.