ETV Bharat / bharat

Mi-17 விமான விபத்து: 6 விமானிகள் மீது நடவடிக்கை - iaf

பட்கம்: இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில், இந்திய விமானப் படையை சேர்ந்த 6 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

Mi-17 crash
author img

By

Published : Oct 14, 2019, 11:09 PM IST

6 விமானிகள் பலி
காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப் படை பதில் தாக்குதல் நடத்தியது.
இதையும் படிக்கலாம்: விமானப்படை ஆண்டு விழா - வானில் சாகசம் புரிந்த அபிநந்தன்
இந்த நிலையில் இந்திய விமானப் படையின் எம்.ஐ – 17 சாப்பர் விமானம், ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்கம் என்ற இடத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 6 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுட்டு வீழ்த்தினர்
விபத்தா? அல்லது பயங்கரவாத தாக்குதலா? என்ற கோணத்தில் முதலில் விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில், இந்திய விமான படையினர் தவறுதலாக தாக்கியதில் Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டது தெரிந்தது.
இதையும் படிக்கலாம்: விமானப்படை தினம் - போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முப்படைத் தளபதிகள்!
இது குறித்து ஐஏஎப் அதிகாரி ராகேஷ் குமார் சிங் கூறும்போது, பெரும் தவறு நடந்துவிட்டது. அதை நான் ஏற்று கொள்கிறேன். விபத்து ஏற்பட்ட காலகட்டத்தில் தீவிரவாதிகள் குறித்த பதற்றம் நிலவி வந்ததால், Mi-17 V5 ரக ஹெலிகாப்டரை, ஏவுகணை என்று விமான படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

நீதிமன்ற விசாரணை
சம்மந்தப்பட்ட இரு அதிகாரிகள் மீதான விசாரணை நடந்து முடிந்தது. அவர்கள் மேல் துறைரீதியான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மேலும் சட்ட நடவடிக்கையையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாம்: 'இந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு’ - ஆர்.கே.எஸ். பதாரியா
மீண்டும் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனமாக இருப்போம் எனக் கூறினார்.
இதுமட்டுமின்றி மேலும் நான்கு அலுவலர்களும் துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை
அதில் 2 பேர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். ஆக இந்திய விமானப் படை 6 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக பேசிய இந்திய விமானப் படை முன்னாள் படைவீரா், “இந்த வழக்கில் இருந்து இந்திய விமானப் படை பாடம் கற்க வேண்டும்” என்றார்.
இதையும் படிக்கலாம்: ஏஎன் 32 விமான விபத்து: சொந்த ஊருக்கு வந்த கோவை வீரர் உடல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.