ETV Bharat / bharat

இலங்கை தமிழர்களின் சமநீதிக்கு அரசு வழிவகை செய்யுமென நம்புகிறேன்- பிரதமர் மோடி!

டெல்லி: ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்களுக்கான நீதியினையும் அமைதியையும் அந்நாட்டு அரசு வழங்கும் என நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி ராஜபக்ச சந்திப்பு  SL government will ensure the equal justice for Lankan Tamils
prime minister modi
author img

By

Published : Feb 8, 2020, 8:24 PM IST

நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியிலுள்ள ஐதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சு வார்த்தையின்போது இருநாட்டின் பாதுகாப்பு, கூட்டு வணிகம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது, இந்தியா மற்றும் இலங்கை நாட்டின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையில், பிரதமர் மோடி, இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை அந்நாட்டு அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த இலங்கையில் அவர்களுக்கு சம வாய்ப்புகளையும், நீதியினையும், அமைதியையும் அந்நாட்டு அரசு வழங்கும் என நம்புகிறேன் என தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், இலங்கையின் பிரதமர் ராஜபக்ச, இந்தியா தங்களது நட்பு நாடு. தங்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே நெருங்கிய வரலாற்று தொடர்புகள் உள்ளன என்றும் இலங்கையில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியா உதவி புரிந்து வந்திருக்கிறது என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டபோது, மீனவர்கள் பிரச்னையை நாங்கள் மனிதாபிமானத்தோடு கையாள்வோம் என்று ராஜபக்ச உறுதியளித்ததாகக்வும் தகவல் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: டெல்லி தேர்தல்: வாக்காளர்களுக்கு ஈடிவி பாரத் வாயிலாக கேஜ்ரிவால் வேண்டுகோள்!

Intro:Body:

I am confident that SL government will ensure the equal justice for Lankan Tamils : PM Modi

தமிழர்களுக்கு சமநீதி கிடைக்க இலங்கை வழிவகை செய்யுமென நம்புகிறேன்:

ராஜபக்‌சவுடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி கருத்து

எம்.மணிகண்டன்

பிப்ரவரி 8, 2020:  

புது டெல்லி:

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் சனிக்கிழமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு உரிய மரியாதை, சம நீதி, அமைதி ஆகியவற்றையும் அளிக்கும் என்று நம்புகிறேன் என கருத்து தெரிவித்தார்.

நான்கு நாள் அரசமுறைப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்தியா மற்றும் இலங்கை நாட்டின் உயர் அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையின் போது உடனிருந்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இலங்கைத்தமிழர்களின் எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு புரிந்து கொள்ளும் என்று நம்புவதாக்க் கூறினார்.

“இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு ஒருங்கிணைந்த இலங்கையில் அவர்களுக்கு சம வாய்ப்புகளையும், நீதியினையும், அமைதியையும் அந்நாட்டு அரசு வழங்கும் என்று உறுதிபட நம்புகிறேன்,” என பிரதமர் மோடி கூறினார்.

இலங்கை பிரதமர் ராஜபக்ச, இந்தியா தனது நாட்டுக்கு நெருங்கிய நட்பு நாடு என்று கூறினார்.

“இந்தியா எங்களின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு நாடாகும். இரு நாடுகளுக்கிடையே நெருங்கிய வரலாற்று தொடர்புகள் உள்ளன. இந்திய பிரதமருடனான பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளின் பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதித்தோம். தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கைக்கு என்றென்றும் இந்தியா உதவி புரிந்து வந்திருக்கிறது,” என்று ராஜபக்ச கூறினார்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட்து.

அதுபற்றிய ராஜபக்ச, ”மீனவர்கள் பிரச்சினையை நாங்கள் மனிதாபிமானத்தோடு கையாள்வோம்,” என்று உறுதியளித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.