ETV Bharat / bharat

ஏமாற்றிய லிவ்-இன் இணை - காவல் நிலையம் முன் பெண் தீ வைத்து தற்கொலை

ஹைதராபாத்: திருமணம் செய்யாமல் உறவில் இருந்தவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகாரளித்த சென்னையைச் சேர்ந்த பெண், காவல் நிலையம் முன்பு தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

Hyderabad woman sets self ablaze
Hyderabad woman sets self ablaze
author img

By

Published : Jan 2, 2020, 10:44 AM IST

சென்னையைச் சேர்ந்த லோகேஸ்வரி (37) கடந்த செவ்வாய்க்கிழமை பிரவீன் குமார் என்பவர், தனக்கு பணம் தருவாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டார் என ஹைதராபாத்திலுள்ள பஞ்சகுட்டா காவல் நிலையில் புகாரளித்தார். பின்னர் காவல் நிலையம் முன்பே தீ வைத்துக்கொண்டார். அங்கிருந்த காவல் துறையினர் தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஒஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 60 சதவீத தீக்காயங்களுடன் புதன்கிழமை உயிரிழந்தார். லோகேஸ்வரி இறந்ததைத் தொடர்ந்து, பிரவீன் குமார் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், அந்தப் பெண் தனது கணவர் இறந்த பின் பிரவீன் குமாருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் சென்னையைச் சேர்ந்த லோகேஸ்வரி, ஹைதராபாத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் பணியாற்றும் பிரவீன் குமார் என்ற ஊழியருடன் 2012ஆம் ஆண்டு மேட்ரிமோனி தளம் மூலம் பழக்கமாகி, பின் இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளனர். இதையடுத்து பிரவீன் அவர் வேலை செய்யும் அதே நகைக் கடையில் லோகேஸ்வரிக்கும் வேலை வாங்கித் தந்துள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் 2014ஆம் ஆண்டு தங்க ஆபரணங்களைத் திருடியதாக லோகேஸ்வரி மீது காவல் நிலையில் பிரவீன் புகாரளித்துள்ளார்.

புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட லோகேஸ்வரி சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையானதும் லோகேஸ்வரி பிரவீனிடம் மன்னிப்புக் கேட்டு, தான் கல்யாணம் ஆகாமல் உறவில் இருந்ததற்காக 7.50 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட பிரவீன் கால அவகாசம் கேட்டுள்ளார்.

இதையடுத்து மீண்டும் சென்னை சென்று தன் தாயுடன் லோகேஸ்வரி வாழ்ந்துவந்துள்ளார். நீண்ட நாட்கள் கடந்தும் பிரவீன் பணம் தராததால் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால் தொலைபேசி ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. பிரவீன் தன்னை ஏமாற்றி விட்டார் என நினைத்த லோகேஸ்வரி, தனது நண்பர் கண்ணனுடன் சேர்ந்து பஞ்சகுட்டா காவல் நிலையத்திற்கு வந்து குமார் மீது எழுத்துப்பூர்வமாக புகாரளித்துள்ளார். அதன்பின் லோகேஸ்வரி வெளியே வந்து தீ வைத்துக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் - முதலமைச்சர் நாராயணசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.