ETV Bharat / bharat

ஹைதராபாத் மருத்துவர் கொலை வழக்கு: நால்வருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்! - ஹைதராபாத் மருத்துவர் கொலை வழக்கு

ஹைதராபாத்: பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில், நால்வருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Hyderabad
Hyderabad
author img

By

Published : Nov 30, 2019, 6:05 PM IST

Updated : Nov 30, 2019, 7:00 PM IST

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நவம்பர் 28ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவ சோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் மற்றொரு பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதத்தை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இரு சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இந்நிலையில், பெண் கால்நடை மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையதாக லாரி ஓட்டுநர், கிளீனர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நால்வரும் திட்டமிட்டு பெண் மருத்துவரின் இரு சக்கர வாகனத்தில் பஞ்சர் செய்து, பின்னர் உதவி செய்வதுபோல் நடித்து அவரை பாலியல் வன்புணர்வு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், நால்வரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு இணையான வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். நால்வரும் சேர்லபள்ளி மத்திய சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

இதையும் படிங்க: எரிக்கப்பட்ட மற்றொரு பெண்ணின் பிரேதம்: தெலங்கானாவில் சைக்கோ கொலைகாரர்களா?

Intro:Body:

Hyderabad veterinary doctor rape-murder case accused sent to 14 days judicial custody

A magistrate in Telangana's Shadnagar town sent all four accused in the in gruesome gangrape and murder of a woman veterinarian to judicial custody for 14 days. Mandal Executive Magistrate passed the orders at Shadnagar police station as the accused could not be produced in fast-track court at Mahabubnagar due to non-availability of the judge and also because of tense situation outside the police station.

Accused Mohammed Arif, Chintakunta Chennakeshavulu, Jollu Shiva and Jollu Naveen are likely to be shifted to Mahabubnagar jail. Earlier, three doctors of a government hospital were also brought to the police station as the angry protests by citizens in front of the police station demanding death for the accused created tension. After repeated requests by officials failed to pacify the crowd, the police resorted to lathi-charge to disperse the protestors. The magistrate was brought to the police station from the back door.

Governor Tamilisai Sounderarajan visited the house of the slain Veterinary doctor Priyanka Reddy and consoled the bereaved family.

Conclusion:
Last Updated : Nov 30, 2019, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.