மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதி முகமது ஃபாரூக். இவர் 2009 இல் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தார். சுமார் மூன்று ஆண்டுகள் ஜம்மு-காஷ்மீரில் தங்கியிருந்த பாரூக் பின்னர் 2011 ஆம் ஆண்டில் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்தார்.
இதனை அடுத்து ஃபாரூக் ஜல்பள்ளியில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக மொகல்பூரா காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் ஃபாரூக்கை கைது செய்தனர்.
பின் அவர் தங்கியிருந்த இடத்தை சோதனையிட்ட போது, இந்திய வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட இந்திய தேசிய அடையாள அட்டைகளை கைப்பற்றினார். இதன் மூலம் அவர் அரசின் பல நலத்திட்டங்களை பெற்று வந்துள்ளார். ஆனால் இந்த அடையாள அட்டைகள் அனைத்தும் போலியானது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் மேலும் கூறுகையில், முகமது ஃபாரூக் 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் நுழைந்தபோது தேசிய அடையாளச் சான்றுகளைப் பெறுவதற்காக சையத் குவதீருதீன் என்பவரை சந்தித்துள்ளார்.
சையத் குவதீருதீன் அவரிடமிருந்து கூடுதல் பணம் வசூலித்து போலியான அடையாள அட்டையை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் எனக் கூறினர்.
தற்போது இருவரையும் கைது செய்து மொகல்பூரா காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ரோஹிங்கியா அகதி கைது
ஹைதராபாத்: மியான்மரைச் சேர்ந்த ஒரு ரோஹிங்கியா அகதி, அவருக்கு போலியான அடையாள அட்டை ஏற்பாடு செய்து கொடுத்த நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.