ஹைதராபாத் மேயர் போந்து ராம்மோகன் ஓட்டுநருக்கு நேற்றைய முன்தினம் (ஜூன் 11) கரோனா வைரஸ் தொற்று உள்ளது உறுதியானது. இதனையடுத்து, மேயர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், மேயர் போந்து ராம்மோகன் நேற்று (ஜூன் 10) கரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அதற்கான முடிவு இன்னும் வரவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக கரோனா பரிசோதனைக்கு ஆளாகியுள்ளார் மேயர்.
முன்னதாக மேயர் ஆய்வு சென்ற இடத்திலிருந்த டீக்கடையில் டீ குடித்துள்ளார். பின்னர் அந்த கடையில் வேலைப் பார்த்த ஊழியருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து ஜூன் 7ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் கரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...ஒரே கல்லில் ரெண்டு மாங்கா: கரோனாவை வைத்து காஷ்மீரில் நடப்பது என்ன?