ETV Bharat / bharat

பிரதமரின் துருவ் கற்றல் திட்டம்: இஸ்ரோவில் இன்று தொடக்கம் - DHRUV learning programme from ISRO HQ today

பெங்களூரு: பிரதம மந்திரியின் துருவ் புதியவழிக் கற்றல் திட்டத்தை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இஸ்ரோ தலைமையகத்தில் இன்று தொடங்கிவைக்கிறார்.

hrd-minister
author img

By

Published : Oct 10, 2019, 11:28 AM IST

மாணவர்களிடம் எழும் புதிய சிந்தனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பிரதம மந்திரியின் துருவ் புதியவழிக் கற்றல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துருவ் திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தலைமையகத்தில் தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சிவன், முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான பேராசிரியர் கே. விஜய் ராகவன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

இந்த துருவ் திட்டத்தின் மூலம் இளம் மாணவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்த முடியும். மேலும் அந்த திறமைமிக்க மாணவர்கள் மூலம் சமுதாயத்திற்குத் தேவையான பொருளாதார, அரசியல் சார்ந்த மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளுக்கான தீர்வு பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

இந்தத் திட்டத்தில் பயில ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் தேர்வு செய்யப்ட்டுள்ளனர். இன்று முதல் 14 நாட்கள் நடைபெறும் இந்தத் திட்டத்தின் நிறைவு விழா அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்துப் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், நாடு முழுவதிலும் இருந்து இந்தத் திட்டத்திற்காக திறமையின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் சிறந்த வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு தங்களின் திறமையை அதிகரிக்கவுள்ளனர். இந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் அவர்கள் தேர்வு செய்த துறையில் மிகப்பெரிய சாதனைகள் படைத்து தங்களின் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பார்கள் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.